லொஹான் ரத்வத்த மருத்துவமனையில் அனுமதி!

0
9

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அறுவை சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் பல மாதங்களாகக் கல்லீரல் தொடர்பான நோய்க்கு சிகிச்சை பெற்று வந்தார்.

இதன்படி, அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் தற்போது கொழும்பில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.