சீனாவைச் சேர்ந்த ஒரு மதுபான நிறுவனம் பாகிஸ்தானில் ஒரு உற்பத்தி ஆலையை நிறுவவுள்ளதாக cpecinfo.com.இன் செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹ_ய் கோஸ்டல் ப்ரூவரி அண்ட் டிஸ்டில்லரி லிமிடெட் ( Hui Coastal Brewery and Distillery Limited) என்ற நிறுவனம், கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் திகதியன்று, குறித்த உற்பத்தி ஆலையை நிறுவதற்காக, பாகிஸ்தானின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையகத்தில் (எஸ்.இ.சி.பி) பதிவு செய்யப்பட்டது.
அதேநேரத்தில் உற்பத்தி முதல் பேக்கேஜிங் வரை முழு செயல்முறையும் லாஸ்பெலாவிலுள்ள அதன் ஆலையில் மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த உரிமத்தை பலுசிஸ்தான் கலால் வரிவிதிப்பு மற்றும் போதைப்பொருள் தடுப்புத் துறை வழங்கியுள்ளது.
இந்த நிறுவனம், பலுசிஸ்தானுடன் ஒரு கூட்டு முயற்சியாக லாஸ்பெலா தொழிற்துறை மேம்பாட்டு ஆணையத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
ஹ_ய் கோஸ்டல் ப்ரூவரி மற்றும் டிஸ்டில்லரி லிமிடெட், உலகின் பிரபலமான சில தரக் குறியீடுகளை தயாரிப்பதில் பிரபலமானது.
பாகிஸ்தானில் ஏற்றுமதிக்காக இரண்டு பிரபலமான தரக் குறியீடுகளை அறிமுகப்படுத்த இந்த நிறுவனங்களுக்கு திட்டம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.