டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்டி கொரோனா தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளார்.
14 ஆவது ஐ.பி.எல். தொடரில் டெல்லி கேப்பிட்டஸ் அணியில் இடம் பிடித்துள்ள தென்னாபிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் அன்ரிச் நோர்டியா கடந்த 6 ஆம் திகதி மும்பை சென்று 7 நாட்கள் தனிமைப்படுத்தலில் இருந்தார்.
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் இருந்து இடையில் விலகிய அவர் சக வீரர் காஜிசோ ரபடாவுடன் இணைந்து மும்பை சென்றிருந்தார்.
இந்த நிலையில் தனிமைப்படுத்தலின் போது அன்ரிச் நோர்டியாவுக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்திய கிரிக்கெட் நிர்வாக கொரோனா தடுப்பு நடத்தை விதிமுறையின் படி அவர் 10 நாட்கள் தனிமைப்படுத்துதலில் இருக்க வேண்டும்.
இதன்போது அவரிடம் இறுதி 2 நாட்கள் உட்பட 5 முறை கொரோனா பரிசோதனை நடத்தப்படும். அதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பதை உறுதியான பின்னர் தான் அவர் போட்டிக்கு திரும்ப முடியில்.