தொற்றுக்குள்ளான குருநகர் வாசிகளுடன் நெருங்கிப் பழகிய 36 பேருக்கு நாளை PCR!

0
200

குருநகரில் தொற்றுக்குள்ளானவர்களுடன்  நெருங்கி பழகியவர்களுக்கு நாளை pCR பரிசோதனை  மேற்கொள்ளப்படவுள்ளது

குருநகர் பகுதியில் நேற்று  இருவருக்கு தொற்று இனம் காணப்பட்டுள்ள நிலையில்  தொற்றுக்குள்ளானவர்களுடன் நெருங்கியதொடர்புடையவர்கள் மற்றும் குறித்த நபர்களுடன் ஏற்கனவே தொடர்புகளை பேணிய சந்தை வியாபாரிகள் உட்பட 36 பேருக்கு நாளையதினம் PCR பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக  யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் நேற்று குருநகர் பகுதியில் இருவர்  தொற்றுக்குள்ளான நிலையில் குறித்த பகுதியில் தொற்று மேலும் பரவுவதை தடுப்பதற்காக சன அடர்த்தி கூடிய குருநகர் பகுதியினை முடக்க  மத்திய சுகாதார அமைச்சிடம் அனுமதி கோரப்பட்டபோதிலும் அதற்கு தற்போது வரை அனுமதி கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.