26 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

மட்டு. கிரான்குளத்தின் சில பகுதிகள் முடக்கம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி சுகாதார பிரிவுக்குட்பட்ட கிரான்குளம் பகுதியில் கடந்த 11ஆம் திகதி ஒருவர் சுகவீனமுற்ற நிலையில் மரணமானதை தொடர்ந்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் மரணம் கொரோனா தொற்றினால் சம்பவத்திருந்தமை றுதிசெய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் மேலும் பலர் தொற்றுக்குள்ளாகியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட கொவிட் செயலணி கூட்டத்தில் குறித்த பகுதியை முடக்குவதற்கான பரிந்துரைகள் தேசிய கொவிட் செயலணிக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இதனடிப்படையில் கிரான்குளம் கிராமசேவகர் பிரிவு சியிலுள்ள நெசவு நிலைய வீதி, வேலாப்பொடி வீதி, கண்ணனி அம்மன் ஆலயவீதியும், கிரான்குளம் கிராமசேவகர் பிரிவு பி பிரிவிலுள்ள லோக்றோட் வீதி, விதானையார் வீதி, அப்புகாமி வீதிகள் ஆகிய வீதிகள் தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்டுள்ளது.

இன்று காலை அப்பகுதியில் பொலிஸாரும் படையினரும் பொதுச்சுகாதார பரிசோதகர்களும் இணைந்து குறித்த பகுதியை தனிமைப்படுத்தியுள்ளதுடன் அப்பகுதியில் அன்டிஜன் மற்றும் பிசிஆர் பரிசோதனைகளை தொடர்ச்சியாக முன்னெடுத்துவருகின்றனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles