பொகவந்தலாவையில் புதிதாக 27 தொற்றாளர்கள்!

0
348

தனிமைப்படுத்தப்பட்டுள்ள பொகவந்தலாவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் புதிதாக 27 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் (19) கிடைக்கப்பெற்ற பிசிஆர் முடிவுகளின் படி குறித்த தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொது சுகாதார பரிசோதகர் கதிரவேல் ஜெ.கணேஷ் தெரிவித்தார்.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள நோவுர்ட் சென் ஜோன் டிலரி, ஹட்டன் என்பில்ட், நோர்வுட் பிலின்கபொனி, படல்கல, பொகவந்தலாவ டின்சின், செபல்டன், எல்டொப்ஸ் ஆகிய தோட்டங்களில் குறித்த 27 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

புதிய நோயாளர்கள் 27 பேருடன் நெருங்கி பழகியவர்களை சுய தனிமைப்படுத்தி பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை தனிமைப்படுத்தப்பட்டு உள்ள இன்ஜஸ்டி கிராம சேவகர் பிரிவிற்கு சொந்தமான பிலின்கிபொனி தோட்டத்தின் பாத்பொட் பிரிவில் நான்கு பிள்ளைகளின் தாய் ஒருவர் கொவிட் தொற்று உயிரிழந்துள்ளார்.

59 வயதுடைய டி.மனோமனி என்ற தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.