தேசிய கண் வைத்தியசாலையின் விஷேட அறிவிப்பு

0
301

தேசிய கண் வைத்தியசாலையில் சிகிச்சை மற்றும் சேவைகளை பெற்றுக் கொள்வதற்கு முன்பதிவு செய்து கொள்வது கட்டாயம் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கொவிட் பரவல் காரணமாக வைத்தியசாலை வளாகத்திற்கு குறிப்பிட்ட அளவானவர்களை மாத்திரமே உள்வாங்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.

அனைத்து மாவட்டங்களிலும் கண் சிகிச்சை மருத்து முகாம்கள் இருப்பதால் தேசிய கண் வைத்தியசாலைக்கு வர வேண்டிய தேவை ஏற்படாது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் அத்தியவசிய தேவைகளுக்காக மாத்திரம் முன்பதிவு செய்து கொண்டு வைத்தியசாலைக்கு வருமாறு தெரிவிக்கப்படுகின்றது.