மட்டக்களப்பில் பயணத்தடையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கல்

0
279

மட்டக்களப்பில் பயணத்தடையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மட்டக்களப்பு மாவட்ட அன்பின் உறவு அமைப்பினர் மதிய மற்றும் இரவு உணவுகளை வழங்கி வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இயங்கி வரும் அன்பின் உறவு அமைப்பானது மாவட்டத்தில் இயற்கை அனர்த்தங்கள் மற்றும் அசாதாரண சூழ்நிலைகள் ஏற்படும்போது பாதிப்புக்குள்ளாகும் யாசகர்கள், குடும்ப உறவுகளால் கைவிடப்பட்டவர்களுக்கு மதிய மற்றும் இரவு உணவுகளை வழங்கி வருகின்றது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள யாசகர்கள் , உறவுகளால் கைவிடப்பட்டவர்கள் , கொவிட் வைரஸ் தொற்றின் காரணமாக தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட வறுமை கோட்டின் கீழ் வாழ்பவர்களுக்கு மதிய மற்றும் இரவு உணவுகளை வழங்கி வருகின்றது .