மட்டு. ஆயித்தியமலையில் இரும்புக் கம்பியால் தாக்கி பெண் கொலை

0
945

மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில் பெண்ணெருவர் இரும்புக் கம்பியால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக ஆயித்தியமலை பொலிஸார் தெரிவித்தனர்.

ஆயித்தியமலை தெற்கு கிராமத்தில் வசித்து வந்த நான்கு பிள்ளைகளின் தாயான புஸ்பராசா தேவகி என்பவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவராவார்.

இன்று அதிகாலை மரணமான தேவகியின் வீட்டுக்குச் சென்ற அதே கிராமத்தைச் சேர்ந்த சிலர், முன்னைய பகையை வைத்துக்கொண்டு இரு சாராரும் கைகலப்பில் ஈடுபட்டபோது தேவகி இரும்பு கம்பியால் தலையில் பலமாக தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, காயமடைந்த பெண் செங்கலடி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும்போது உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் மற்றுமொருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு குற்றத்தடுப்பு பிரிவு, தடயவியல் பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று ஆயித்தியமலை பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.