தலங்கம பெலவத்த பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து, 3 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம், பணம் என்பவற்றைக் கொள்ளையிட்ட இருவரை, கொழும்பு தெற்கு பிரிவு குற்றப்புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர் என்று, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
திருடப்பட்ட நகை, தங்கம் என்பவற்றையும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் இதன்போது கைப்பற்றியுள்ளனர. திருடப்பட்ட பொருட்களை மறைத்து வைப்பதற்கு உதவிய இருவரையும் பொலிஸார் இதன்போது கைதுசெய்துள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர்களிடமிருந்து வெளிநாட்டு நாணயங்கள், தங்க நகைகள், தொலைபேசிகள், 3 கிராம் ஹெரோய்ன் என்பவற்றையும் பொலிஸார் கைப்பறியுள்ளனர்.
கிருலப்பனை, நாரஹேன்பிட்ட ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.