28.6 C
Colombo
Friday, November 22, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

யாழில் சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கே முதற்கட்டமாக 5ஆயிரம் ரூபா கொடுப்பனவு. அரச அதிபர்.

யாழ் மாவட்டத்தில் சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கு முதற்கட்டமாக 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்தார்

இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் நடாத்திய பத்திரிகையாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்

அரசினால் வறுமைப்பட்ட குடும்பங்களுக்கு இடர்கால நிதியாக வழங்கப்படும் 5ஆயிரம் ரூபா கொடுப்பனவு யாழ்ப்பாண மாவட்டத்தில் நேற்று காலையிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றது 

குறித்த நிதியானது முதற்கட்டமாக சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கே யாழ் மாவட்ட ரீதியில் வழங்கப்பட வுள்ளது 
அதிலும் சமுர்த்தி, முதியோர் கொடுப்பனவு பெறுவோர் மாற்றுத்திறனாளிகளுக்கான கொடுப்பனவு பெறுவோருக்கே  முதற்கட்டமாக இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது 
ஏனைய பிரிவினருக்கு அடுத்த கட்டமாக இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது எனவே பொதுமக்கள் இந்த விடயம் தொடர்பில் குழப்பமடைய தேவையில்லை 

யாழ்ப்பாணக் குடாநாட்டின் பல்வேறு பட்ட இடங்களில் மக்கள் மத்தியில்  குழப்ப நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது எனினும் பொது மக்கள் அவ்வாறு குழப்பமடைய தேவையில்லை 
முதற் கட்டமாக சமுர்த்தி பெறும் குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படும் அதன் பின்னர் ஏனையோருக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்படும் என தெரிவித்த அரச அதிபர் 
மேலும்

யாழ் மாவட்ட தற்போதைய கொரோனா  நிலை தொடர்பில் கருத்துரைக்கும் போது

யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா  தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை    3144 ஆக காணப்படுகின்றது 

நேற்று பெறப்பட்ட பிசிஆர்  பரிசோதனையின் படி  122 பேருக்கு தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது அதே நேரத்தில்  உடுவில் பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட இனுவில்  கிராமத்தில் ஜே190 கலா ஜோதி கிராமமானது இன்று காலையில் இருந்து தனிமைப்படுத்தலுக்கு ட்படுத்தப்பட்டுள்ளது 

ஏற்கனவே மூன்று கிராமங்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் தனிமைப் படுத்தப் பட்டுள்ளது 

மேலும்  யாழ் மாவட்டத்தில் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் கடந்த ஞாயிற்றுக் கிழமையிலிருந்து ஆரம்பிக்கப்பட்டு முடிவுறுத்தப்பட்டுள்ளது

முதற்கட்டமாக கிடைத்த 50ஆயிரம் தடுப்பூசிகளில் அனைத்து தடுப்பூசிகளும் முடிவுறுத்தப்பட்டுள்ளன . 
உயர் ஒவ்வாமை போன்ற காரணங்களுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவோருக்கு வழங்கவென  500 தடுப்பூசிகள் பிரதேச வைத்திய சாலைகளுக்கும் போதனா வைத்தியசாலைக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது 
அதனைவிட சுமார் 1600 தடுப்பூசிகள் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கும் கல்விசாரா உத்தியோகத்தர்களுக்குமென1600 ஒதுக்கீடு செய்யப்பட்டது  
 4 பிரதேச செயலர் பிரிவில் எஞ்சிய தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன .தெல்லிப்பழை, உடுவில்   ஊர்காவற்துறை மற்றும்  சாவகச்சேரி ஆகிய பகுதிகளில் எஞ்சிய தடுப்பூசிகள் இன்று வழங்கப் பட்டது 

 அத்துடன் யாழ் மாவட்டத்தில் முதலாம் கட்ட தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் முடிவுறுத்தப் பட்டுள்ளன

தற்பொழுது கிடைத்திருக்கின்ற முதற்கட்ட தடுப்பூசிகள் அனைத்தும் முடிவுறுத்தப்பட்டுள்ளன 
ஏற்கனவே  61  கிராம சேவகர்  பிரிவுகளுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது எனினும் பின்னர் கிராம உத்தியோகத்தர் பிரிவு அதிகரிக்கப்பட்டதன் காரணமாக 96 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளை சேர்ந்த மக்களுக்கு பகுதி அளவில் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது

தடுப்பூசி வழங்கல்  நடவடிக்கைக்கு அனைத்து மக்களும் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றார்கள் ஆகவே அடுத்த கட்ட தடுப்பூசி கிடைத்தவுடன்  ஏற்கனவே திட்டமிடப்பட்ட மிகுதி கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிற்கு இந்த தடுப்பூசி வழங்கப்படும்

அரசினால்   தனிமைப்படுத்தப்பட்டோரு க்கு வழங்கப்படும் பத்தாயிரம் ரூபா உணவு பொதி தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றது.
மேலும் பயணத் தடை அமுலில் உள்ள காலத்தில்  பொதுமக்களுக்கு மிகவும்  அத்தியாவசியமான சில செயற்பாடுகளுக்கு பிரதேச மட்டங்களில் அனுமதியினை வழங்கியுள்ளோம் அதேநேரத்தில் மாவட்டங்களுக்கிடையே மிகவும் அத்தியாவசியமான தேவைகளுக்கு மாத்திரம் போக்குவரத்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது 
இருந்தபோதிலும் சில அலுவலகங்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக திறந்து இயங்கும்  நிலை காணப்படுகின்றது.


 ஆகவே இந்த நிலையில் பொதுமக்கள் இந்த சலுகைகளை துஸ்பிரயோகம் செய்யாது  தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் ஏனெனில் பயணத்தடை யானது தற்பொழுது மேலும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது ஏனென்றால் நாளாந்தம் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது எனவே பொதுமக்கள் அதனை உணர்ந்து தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்

சுகாதாரப் பிரிவினருடைய கணக்கின்படி யாழ் மாவட்டத்திற்கு மேலும் மூன்று லட்சத்துக்கு அதிகமான தடுப்பூசிகள்   தேவையாக உள்ளது எனினும் அரசாங்கம் எவ்வளவு தடுப்பூசி வழங்குகின்றதோ அதனை உடனடியாக பொதுமக்களுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை களை முன்னெடுத்துள்ளோம் என அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles