வீடொன்றிலிருந்து தம்பதியினரின் சடலங்கள் மீட்பு

0
190

வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செல்லபவ பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து திருமணமான இளம் தம்பதியினரின் சடலங்கள் நேற்று(6) மாலை மீட்கப்பட்டுள்ளன.

பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் சடலங்களை மீட்டுள்ளனர்.

36 வயதுடைய நபரும் 21 வயது பெண்ணொருவருமே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

படுக்கையறையிலிருந்தே சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

உயிரிழந்த நபர் மருத்துவப் பயிற்சியாளர் என்பதுடன் வெல்லவாய பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார் என்று பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பிரேதப் பரிசோதனைக்காக சடலங்கள் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.