முதியவர்கள், கர்ப்பிணித் தாய்மார்களுக்கு முதலில் தடுப்பூசிகள் வழங்கப்படும்

0
399

முன்னுரிமையின் அடிப்படையில் கொரோனாத் தடுப்பூசிகள் ஏற்றப்படும் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கிடைக்கவுள்ள 25 ஆயிரம்
தடுப்பூசிகள் தொடர்பில் இன்று மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் க.கருணாகரன் இவ்வாறு தெரிவித்திருந்தார்

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கிராமங்கள் மற்றும் அதிகரிக்கும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்பிலும் மாவட்ட அரசாங்க அதிபர் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.

எவ்வாறாயினும், அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடையின் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழ்வாதாரத்தை இழந்த 82, 832 வறிய குடும்பங்களுக்காக கொடுப்பனவாக 41 கோடி 41,இலட்சத்தி 24 ஆயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் தெரிவித்துள்ளார்.