46 வயசாச்சாம்…நம்ப முடியுதா…ஹாப்பி பர்த் டே ஷில்பா

0
389

புகழ்பெற்ற நடிகை, மாடல், தொழிலதிபர் என பல முகங்களை கொண்டவர் ஷில்பா ஷெட்டி. 1990 கள் முதல் பல மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து, தனது கவர்ச்சிகரமான தோற்றத்தால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர் ஷில்பா.


ஷில்பா, 1975 ம் ஆண்டு ஜுன் 8 ம் தேதி கர்நாடக மாநிலம் மங்களூருவில் பிறந்தவர். ஷில்பாவின் பிறந்தநாளை முன்னிட்டு கணவர் குந்த்ரா வெளியிட்டுள்ள வாழ்த்தில், நீ இல்லாவிட்டால் நான் ஒன்றுமில்லை என குறிப்பிட்டுள்ளார்.
முன்னணி நடிகையான ஷில்பா ஷெட்டி, 2009 ம் ஆண்டு தொழிலதிபரான ராஜ் குந்தராவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். நடிகை, மனைவி, தாய், மகள், சகோதரி என வகையிலும் தனது பெஸ்ட்டை நிரூபித்து வருகிறார் ஷில்பா ஷெட்டி. 1993 ம் ஆண்டு பாசிகர் என்ற இந்தி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஷில்பா. தமிழில் மிஸ்டர் ரோமியோ, குஷி ஆகிய படங்களில் நடித்துள்ளார். 2 படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மனதில் அழுத்தமான இடம்பிடித்துள்ளார் ஷில்பா.

யோகா செய்வதை வழக்கமாக கொண்ட ஷில்பா ஷெட்டி, சிக்கென்ற கட்டழகால் மற்ற நடிகைகளை மிரள வைத்து வருகிறார்.
46 வயதிலும் படு கிளாமராகவும், ஸ்டெயிலாகவும் இவர் நடத்தும் ஃபோட்டோஷுட், பார்ப்பவர்களை பொறாமை கொள்ள வைக்கிறது.


இன்ஸ்டாகிராமில் அடிக்கடி தான் உடலை வில்லாக வளைத்த யோகா வீடியோக்களையும், குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் ஃபோட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். ஃபோட்டோவாகவும், வீடியோவாகவும் ஷில்பா வெளியிடும் ஃபோட்டோஷுட்களுக்கு தனி ரசிகர் கூட்டமே உண்டு.