ஏறாவூரில் தடுப்பூசிகள் ஏற்றல்

0
395

ஏறாவூர்ப் பிரதேசத்தில் அறுபது வயதிற்கு மேற்பட்டோருக்கு சினோபாம் கொரோனா தடுப்பூசி ஏற்றும் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டது.

ஏறாவூர்ப் பிரதேசத்தின் மிச்நகர் கிராம சேவகர் பிரிவிலுள்ள இல்மா வித்தியாலய நிலையத்திலும், ஏறாவூர் அல்- ஜுப்ரிய்யா பாடசாலை மண்டபத்திலும் தடுப்பூசிகள் வழங்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஏறாவூர் – 3ஏ பிரிவில் 201 நபர்களுக்கும் மிச்நகர் கிராம சேவகர் பிரிவில் 547 நபர்க்குளும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டன.

பிரதேச சுகாதார வைத்தியதிகாரி திருமதி சாபிறா வசீம் முன்னிலையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அரசாங்கத்தினால் வழங்கப்படும் இத்தடுப்பூசியை ஏற்றிக்கொண்டதில் மிகுந்த நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாக தடுப்பூசியை ஏற்றிக்கொண்டவர்கள் தெரிவித்தனர்.