அரசாங்கத்தின் கரிம உரக் கொள்கைக்கு தாம் ஆதரவளிப்பதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் 1960 ஆம் ஆண்டு இரசாயன உரங்களைப் பயன்படுத்தி விவசாயத்தை ஆரம்பித்தனர். உணவு பற்றாக்குறை மற்றும் கையிருப்பை பராமரிக்கவும், இரசாயன உரங்களைப் பயன்படுத்தி விவசாயத்தை மேம்படுத்த வேண்டும் என்று அந்த நேரத்தில் கூறப்பட்டது.
இதுவே, தொற்றா நோய்கள் அதிகரிக்க வழிவகுத்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை, கரிம உரங்களல்லாத, உரங்களைப் பயன்படுத்துவதால் பல பாதகமான விளைவுகள் உள்ளதாக, அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்தியர் அனுருந்த பாதெனிய நேன்று (08) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது தெரிவித்தார்.