கொழும்பு கொள்ளுப்பிட்டிய பிரதேசத்திலுள்ள அதிசொகுசு வீடொன்றில் விருந்துபசாரத்தில் ஈடுபட்ட 10 பேரை கொள்ளுப்பிட்டிய பொலிஸார் இன்று(10) கைதுசெய்துள்ளனர்.
வெளிநாட்டவர்கள் உட்பட 10 பேரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் மூன்று பெண்களும் ஆறு ஆண்களும் உள்ளடங்குகின்றனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களில் மூவர் வெளிநாட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கைதுசெய்யப்பட்டவர்களை கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.