தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் 92 பேருக்கு தொற்று

0
207

தொம்பே சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட மீதிரிகல ரன்வல பிரதேசத்திலுள்ள தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் 92 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தொம்பே பொதுசுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் தெரிவித்துள்ளது.

தொழிற்சாலை ஊழியர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே 92 பேருக்கு தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

தொழிற்சாலைகளின் பணிகளை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.