மட்டு.கல்லடியில் அல்பா வேறியன் வைரஸ் தொற்று அடையாளம்: குணராஜசேகரம்

0
995

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணி நேரத்தில் 57கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ள நிலையில் 04பேர் மரணமடைந்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம்.மயூரன் தெரிவித்தார்.

இன்று காலை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்லடி பகுதியில் அல்பா வேறியன் வைரஸ் தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தொற்று நோய் தடுப்புப் பிரிவு வைத்தியர் குணராஜசேகரம் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரோனா பரவலின் வீதம் அதிகரித்துள்ளதுடன், கர்ப்பிணித் தாய்மார்களின் இறப்புக்களின் வீதமும் அதிகரித்துள்ளதாகவும் வைத்தியர் குணராஜசேகரம் தெரிவித்துள்ளார்.