வாகரை கதிரவெளியில் யானை உயிரிழப்பு

0
317

மட்டக்களப்பு வாகரை கதிரவெளி எனுமிடத்தில் உயிரிழந்த நிலையில் யானை ஒன்று மீட்க்கப்பட்டுள்ளதாக வாகரைப் பொலிசார் தெரிவித்தனர்.

கதிரவெளி கரையாவெளி வயல் பகுதியில் உலாவித் திரிந்த யானை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.குறித்த யானை சுமார் 10 வயதுக்கு மேற்பட்டதாக இருக்கலாம்

நேற்றைய தினம் கிரான் வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்கள் குறித்த இடத்தில் யானையை பார்வையிட்டு சென்றவுடன் இன்றைய தினம் யானைக்கு உடல் கூற்று பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது

எவ்வாறாயினும் தமது பகுதி எல்லைக்குள் காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றார்கள் .