மட்டக்களப்பில் அரச திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு தடுப்பூசிகள் ஏற்றல்

0
216

அரச திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான சினோபாம் தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் இன்று மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டன.

கிழக்கு மாகாணத்தின் மாவட்டத்திற்கான கொவிட் – 19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை முன்னுரிமைக்கு அமைய தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையின் கீழ் அரச ததிணைக்கள உத்தியோகத்தர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டன.

இதற்கமைய மட்டக்களப்பு பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிகளின் தலைமையின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் நீர்ப்பாசன திணைக்களம் , பெற்றோலிய கூட்டுத்தாபனம் , தபால் திணைக்களம் , மதுவரி திணைக்களம் , ஸ்ரீ லங்கா டெலிகொம் ஆகிய திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான தடுப்பூசிகள் ஏற்றும் நடவடிக்கைகள் இன்று இந்து கல்லூரியில் முன்னெடுக்கப்பட்டுள்ளன.