திருகோணமலை குச்சவெளி கல்லராவ மீன்பிடி கிராமத்தில் கரை வலை மூலம் மீன் பிடித்த மீனவர்களின் வலையில் சுறா மீன் ஒன்று சிக்கியுள்ளது.

நேற்று மாலை சிக்கிய குறித்த மீன் பாதுகாப்பாக கடலில் விடப்பட்டுள்ளது எனவும் மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த மூன்று நாட்களாக குறித்த பகுதியில் சுறா மீன்கள் கரையொதுங்குவதாக இப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.