அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக விரைவில் சரத் வீரசேகர நியமனம்

0
231

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர, விரைவில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக நியமிக்கப்படுவார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஓகஸ்ட் மாதம் இடம்பெற்ற பொதுத் தேர்தலில், கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட சரத் வீரசேகர, அதிக விருப்பு வாக்குகளைப் பெற்று இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சட்ட அமுலாக்கல் தொடர்பான பொறுப்புக்களுடன் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக அவர் பதவி உயர்வு பெற வாய்ப்புள்ளது என அந்த வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.