வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன தலைமையில் நேற்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது பிரதேச செயலக ரீதியாக புலம்பெயர் ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் 2019 ஆம் ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி தொடர்பான விவரங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
மேலும் வெளிநாடுகளிலிருந்து திரும்பி வந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு வாழ்வாதார உதவிகள் தேவைப்படுவதாகவும் மாவட்ட செயலக இணைப்பாளரால் சுட்டிக்காட்டப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அமைச்சின் செயலாளரால், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கும் சவால்கள் வினாவியதோடு நாட்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கூடுதலான பங்களிப்பை புலம்பெயர் தொழிலாளர்கள் பெற்றுத் தருவதனால் புலம்பெயர் தொழிலாளர்களை பலப்படுத்த வேண்டும் எனத்; தெரிவித்துள்ளார்.
மேலும் வெளிநாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்கள் ‘ஸ்ரமிக சுரெகும’ எனும் திட்டத்தின் கீழ் பதிவு செய்த உத்தியோகத்தர்கள் மக்களிடையே விழிப்புணர்வு மேற்கொள்ளுதல் வேண்டும்.
அத்தோடு ஆளணிகளைப் பலப்படுத்துவதன் மூலம் திறன் மிக்க தொழிலாளர்களை வெளிநாட்டுக்கு அனுப்ப உரிய நடவடிக்கைகளை விரைவில் எடுக்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் முகவர் நிலையத்தை இயங்கச் செய்வதற்குரிய இடவசதிகளை விரைவில் ஏற்படுத்தவுள்ளதாகவும் தன்னால் முடியுமானவரை வேலையில்லாப் பிரச்னைக்குரிய தீர்வுகளை விரைவில் வழங்குவதாகவும் ஜப்பான் மொழிப்பயிற்சி ஜனவரியிலிருந்து ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பதாகவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இக்கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜெயரத்ன, அமைச்சின் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், மேலதிக செயலாளர் ஜமுன பெரேரோ, மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) எஸ்.முரளிதரன், உதவி மாவட்ட செயலாளர், அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.