இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 430 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
இந்தத் தொற்றாளர்களில் கொழும்பிலேயே அதிகளவானவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அதன்படி கொழும்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் 251 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறிப்பாக கொள்ளுப்பிட்டியில் மாத்திரம் 55 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதேநேரம் கம்பஹா மாவட்டத்தில் 18 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேபோன்று களுத்துறையில் 16 கொரோனா நோயாளர்களும் புத்தளத்தில் 6 கொரோனா நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
மேலும் இரத்தினபுரியில் 8 பேருக்கும் கண்டியில் 4 பேருக்கும் கேகாலையில் 7 பேருக்கும் காலியில் இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதேவேளை, நுவரெலியா, திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் 91 பேருக்கும் சிறைக் கைதிகள் 24 பேருக்கும் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.