பைடனுக்கு வாழ்த்து தெரிவித்த சீனா

0
225

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெறுவார் என்ற கணிப்புக்குப் பின் பல்வேறு நாட்டின் தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில், இத்தனை நாட்களுக்குப் பிறகு சீனா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளது.

“அமெரிக்க மக்களின் தேர்வை நாங்கள் மதிக்கிறோம். பைடன் மற்றும் கமலா ஹாரிஸ{க்கு எங்களின் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்,” எனச் சீன வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சமீப நாட்களில் சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே வர்த்தகம், கொரோனா பெருந்தொற்று, உளவு பார்த்தல் என பல்வேறு காரணங்களால் பதற்றங்கள் அதிகரித்திருந்தன.

சீனா தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து மௌனம் கலைத்திருந்தாலும், ரஷ்யா இதுவரை பைடனுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை.

ஜோ பைடனுக்கு சீனா வாழ்த்து தெரிவித்திருப்பதன் மூலம், சீனாவின் தலைவர்கள், குறிப்பாக நாட்டின் அதிகாரமிக்க அதிபர் ஷி ஜின்பிங், அமெரிக்க தேர்தல் முடிவுகளையும், டிரம்பின் தேர்தல் பிரசாரக் குழு நீதிமன்றத்தில் முறையீடு செய்திருந்தாலும் ஜனவரியில் பைடன் அதிபராக பதவியேற்று கொள்வதையும் ஏற்றுக் கொண்டுவிட்டார்கள் என்பதைக் காட்டுகிறது