நயன்தாரா பிறந்த நாளில் ‘நெற்றிக்கண்’ போஸ்டர்: விக்னேஷ் சிவன் அசத்தல்!

0
323

தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை நயன்தாரா இன்று (18) தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு ஒட்டுமொத்த தமிழ் திரையுலகமே வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நயன்தாரா நடித்து வரும் நெற்றிக்கண் என்ற திரைப்படத்தை தயாரித்து வரும் இயக்குநரும் நயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன் இன்று இந்த படத்தின் போஸ்டரை வெளியிட்டு அசத்தியுள்ளார்.
இந்த போஸ்டரில் நயன்தாரா பார்வையற்ற மாற்றுத்திறனாளி வேடத்தில் நடித்திருப்பது இந்த போஸ்டரின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் டீசர் இன்று காலை 9.09க்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மிலந்த் ராவ் என்பவரின் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்து விட்டதாகவும் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் கொரிய மொழியில் வந்த ஒரு திரைப்படத்தின் தழுவி எடுக்கப்பட்ட படம் என்றும் நயன்தாரா முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் இந்த படம் அவருக்கு மிகப்பெரிய புகழை பெற்று கொடுக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.