நாட்டின் சில பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஊவா மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல், வடமேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.