இரவு நேர ஊரடங்கு!

0
260

பிகார் மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில் இரவு நேர ஊரடங்கு பெப்ரவரி 6 ஆம் திகதி வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
பிகாரில் அதிகரித்துவரும் கொரோனா தொற்று பரவலைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொற்று பரவல் சூழல் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து பிகாரில் அமலில் உள்ள கொரோனா கட்டுப்பாடுகள் பிப்ரவரி 6 ஆம் திகதி வரை நீடிக்கப்படுவதாக மாநில அரசு அறிவித்துள்ளது. அதன்படி தற்போது அமலில் உள்ள இரவு நேர ஊரடங்கு பெப்ரவரி 6 ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.