சர்மிளா ராஜபக்ஷ இராஜினாமா!

0
225

நாசவேலைகள் மற்றும் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போதைய ஆபத்தான நிலைமையை நீக்கும் வரை தான் சேவையில் இருந்து விலகி இருப்பதாக விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சர்மிளா ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் செயலாளர் மற்றும் வனஜீவராசிகள் மற்றும் வன பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தின் மூலம் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
14 நாட்களுக்குள் விசாரணை நடத்தி தன் கடமையைச் செய்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்க வேண்டும் என்று குறித்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இல்லை எனில் தாம் பதவி விலகுவதாகவும் சர்மிளா ராஜபக்ஷ குறித்த அந்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.