குளத்தில் பூ பறிக்கச் சென்ற மாணவன் குளத்தில் மூழ்கி மரணம்!

0
128

புத்தளம் மாதம்பை தினிப்பிட்டிய குளத்தில் மூழ்கி 15 வயதுடைய பாடசாலை மாணவன்
ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாதம்பை பூவக்குளம் பகுதியில் வசிக்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக
மாதம்பை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மாணவன் இன்று காலை தனது சக நண்பர்கள் இருவருடன் குளத்தில் பூ பறிக்கச் சென்ற நிலையிலேயே
நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மாதம்பை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.