நாட்டில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்!

0
192

கொரோனா தொற்றுக் காரணமாக, மேலும் 23 பேர் உயிரிழந்துள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், இன்று இரவு உறுதிப்படுத்தியுள்ளார்.
நேற்று நிகழ்ந்த இந்த மரணங்களை அடுத்து, கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 15 ஆயிரத்து 369 ஆக பதிவாகியுள்ளது.
நேற்று உயிரிழந்தவர்களில், 30 வயதுக்கு கீழ் ஒரு பெண்ணும், 30 முதல் 59 வயதுக்கு இடைப்பட்ட 2 ஆண்களும், 60 வயதுக்கு மேற்பட்ட 10 ஆண்களும் 10 பெண்களும் உயிரிழந்துள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.