வெளிநாட்டு நாணயங்களை கடத்த முயன்ற இருவர் கைது!

0
175

11 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை டுபாய்க்கு கடத்த முயன்ற இலங்கையர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்படி சந்தேக நபர்கள் டுபாய் நோக்கி பயணிப்பதற்காக இன்று அதிகாலை 2.55 மணியளவில் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது அவர்களின் பயணப் பொதிகளை பரிசோதித்த சுங்க அதிகாரிகள், 46,000 யூரோ பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களை கைப்பற்றியதாக சுங்கப் பேச்சாளரும், பிரதி சுங்கப் பணிப்பாளருமான சுதத்த சில்வா தெரிவித்தார்.
சந்தேகநபர்கள் கொழும்பு பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.