முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
சிறைச்சாலை அதிகாரிகள் ரஞ்சன் ராமநாயக்கவை ஆணைக்குழுவின் விசாரணைப் பிரிவுக்கு இன்று அழைத்து வந்தனர்.
2015-2019 நல்லாட்சி அரசாங்கத்தின் போது இடம்பெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், அந்த அரசாங்கத்தில் ரஞ்சன் ராமநாயக்க இராஜாங்க அமைச்சராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.