பிரதேச சிறுவர் அபிவிருத்தி குழுவின் 2022 ஆண்டுக்கான ஆரம்ப குழு கூட்டம் மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் இன்று நடைபெற்றது .
மண்முனை வடக்கு சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவின் ஒழுங்கமைப்பில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி .வாசுதேவன் தலைமையில் பிரதேச சிறுவர் அபிவிருத்தி குழுவின் 2022 ஆண்டுக்கான ஆரம்ப கூட்டம் நடைபெற்றது.
இதன்போது பால்நிலை அடிப்படையிலான குடும்ப வன்முறைகள், சிறுவர் துஸ்பிரயோகம்,போதை வஸ்து பாவனை,யாசகம் எடுத்தல், சிறுவர் மற்றும் பெண்களுக்கான பாலியல் தொல்லை போன்ற விடயங்கள் தொடர்பான கலந்துரையாடலும் அதனை கட்டுப்படுத்துவதற்கான செயல் நடவடிக்கை தொடர்பாக ஆராயப்பட்டது .
பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற இக் குழு கூட்டத்தில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இ .உதயகுமார் ,மண்முனை வடக்கு பிரதேச செயலக திட்டமிடல் பணிப்பாளர் எ.சுதர்சன் ,முறைசாரா கல்வி உதவி கல்விப்பணிப்பாளர் , எம் .தயானந்தன் ,கொக்குவில் பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி எம்.பிரதீப் ,காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு பொலிஸ்நிலைய சிறுவர், பெண்கள் பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் ,சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் .கிராம அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் , அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், மகளிர் அமைப்புக்கள் ,சமுதாயசார் சீர்த்திருத்த திணைக்கள உத்தியோகத்தர்கள் .பிரதேச மட்ட சமூக சேவை உத்தியோகத்தர்கள் ,கிராம சேவை உத்தியோகத்தர்கள் , இணக்கசபை பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.