சுகாதார சேவைகள் பணிப்பாளர் விடுத்துள்ள செய்தி!

0
157

பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொண்டதன் பின்னர் நாட்டில் உள்ள அனைத்து மக்களினதும் நோயெதிர்ப்பு திறன், எதிர்பார்க்கும் மட்டத்தை அடையும் பட்சத்தில், முகக்கவசம் அணிவதைத் தவிர்ப்பதற்கும், விழாக்களை நடத்துவதற்கும் அனுமதித்து, நாட்டை முழுமையாக திறப்பதற்கு தயாராக உள்ளதாகவும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு, கொரோனா அவசர சிகிச்சை மையங்களின் வசதிகளை மேம்படுத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டம் வெற்றியளித்துள்ளதையடுத்து, அவசர சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்படும் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டளவில் குறைந்துள்ளது என்று அவசர சிகிச்சைகளுக்கான விசேட வைத்தியர்களின் நிறுவகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.