டீசல் தடுப்பாடு காரணமாக புகையிரத சேவைகளை முன்னெடுப்பதில் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என ரயில்வே பிரதி பொது
முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்தார்.
அடுத்த சில நாட்களுக்கு சேவைகளை முன்னெடுப்பதற்கு போதுமான அளவு டீசல் கையிருப்பு இலங்கை ரயில்வே திணைக்களத்திடம் உள்ளது.
இதேவேளை, நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக சேவையில் ஈடுபடுத்தப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை கணிசமாக குறைவடைந்துள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
50 வீதமான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், நேற்றைய தினம் 15-20 வீதமான பஸ்கள் மட்டுமே சேவையினை முன்னெடுத்ததாகவும் இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.