அண்மையில் ஒரு செய்தியைப் பார்த்ததுதான் இப்போது ஞாபகத்திற்கு வருகின்றது.
பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்கக்கோரி கையெழுத் துப் போராட்டத்தை நடத்திய வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சுகிர்தன், இதன்போது ஒரு நியாய மான கேள்வியைக் கேட்டிருந்தார்.
சுகிர்தன் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் மட்டுமல்ல, கூட்டமைப்பின் இளம் தலைவர்களில் முக்கிய மானவர். கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரனின் தளபதிக ளில் ஒருவர்போல இயங்கிவருபவர்.
பயங்கரவாத தடைச் சட்டம், அரசியல் காரணங்களுக் காக மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது என்பது அவரின் குற்றச்சாட்டாக இருந்தது.
இல்லையெனில், கடந்த உள்@ராட்சி தேர்தல் பிரசாரத் தின்போது விடுதலைப் புலிகளின் பாடல்களை ஒலிபரப்பி பிரசாரம் செய்த அங்கஜன் இராமநாதன்மீது ஏன் இந்தச் சட்டம் பாயவில்லை. புலிகளின் தலைவர்களின் படங்கள் வைத்திருந்த அப்பாவிகள் கைது செய்யப்படுகின்றபோது, பகிரங்கமாக பாடல்களை ஒலிபரப்பிய அங்கஜன்மீது ஏன் அந்தச் சட்டம் பாயவில்லை என்பது அவரின் கேள்வி. – நியாயமானதுதான்.
அங்கஜன் அப்போது அரச தரப்பு எம். பி. அதனால்தான் அவர்மீது அந்தச் சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட வில்லை என்பது அவரின் குற்றச்சாட்டு.
இப்போது அதே குற்றச்சாட்டு கூட்டமைப்பின்மீதும் சுமத்தப்பட்டிருக்கின்றது.
கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன், அண்மையில் உலகத் தமிழர் பேரவையுடன் இணைந்து தமிழக முதலமைச் சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்ததை வாசகர்கள் மறந்திருக்கமாட்டார்கள்.
இந்தியப் பிரதமர் மோடி இலங்கை வரவிருக்கிறார். அந்த விஜயத்தின்போது தமிழர் விடயத்தில் ஓர் அழுத்தம் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மோடிக்கு சிம்மசொப்பனமாக திகழும் தலைவர் ஒருவரை வாழ்த்தி, போற்றி, புகழ்வது அவருக்கு மகிழ்ச்சியை உண்டாக் குமா என்று ஊர்க்குருவி இதுதொடர்பாக கேள்வியும் எழுப் பியிருந்தது.
இந்தக் கேள்வியில் தொக்கிநின்ற சந்தேகத்தை இப்போது, கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவும் கிளப் பியிருக்கின்றது. இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பு ஒன்றுடன் சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்கா சென்றிருந்தது கூட்டமைப்புக் குழு. அமெரிக்கா தங்களை அழைத்தபோது
அவர்களையும் அழைத்திருந்தது என்று அப்போது விளக்க மளிக்கப்பட்டது. ஆனால், அவர்களை அழைத்தவர்கள் யார் என்பது தமிழ் மக்களுக்கு தெரியாததல்ல.
அது சரி, இப்போது தடை செய்யப்பட்ட இயக்கத்து டன் சேர்ந்து கூட்டமைப்பின் பேச்சாளர் தமிழக முதல்வ ருக்கு கடிதம் எழுதுகிறார். ஆனால், அதனை பயங்கரவாத தடைச் சட்டம் கண்டுகொள்ளவில்லை என்றால், அந்த கடித விவகாரத்திற்கு அரசின் ஆசியும் இருக்கிறதா என்றே ரெலோ இப்போது கேள்வி எழுப்பியிருக்கின்றது.
ஈழத்தமிழர் இனப்பிரச்னைக்கு தீர்வுகாணும் விடயத்தில் இந்தியப் பிரதமரின் உதவியைக் கோரி ரெலோ ஆறு கட்சிகளுடன் இணைந்து கடிதம் ஒன்றை அனுப்பியிருந் தது. அந்த ஆறு கட்சிகளையும் இணைத்துக்கொண்டு தமிழகம் செல்வதற்கு ரெலோ ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தது. தமிழக முதல்வரை மாத்திரமன்றி, அனைத்து தமிழக தலைவர்களையும் (பாரதிய ஜனதா கட்சி உட்பட) சந்திப்பதற்கு ரெலோ திட்டமிட்டிருந்ததுடன் அதற்கான ஏற்பாடுகளையும் செய்துகொண்டிருந்தபோது, தமிழக முதல்வருக்கு மாத்திரம், அதுவும் அவரை உலகத் தமிழினத்தின் காவலனாக வர்ணித்து ஒரு கடிதத்தை கூட்ட மைப்பின் பேரில் அதன் பேச்சாளர் தடைசெய்யப்பட்ட உலகத் தமிழர் பேரவையுடன் சேர்ந்து திடீரென்று அனுப்பி யிருந்தார். இதற்காக உலகத் தமிழர் பேரவையை தடைசெய் ததை இந்த ஊர்க்குருவி ஏற்றுக்கொள்கின்றது என்பதல்ல.
அந்தக் கடிதம் கூட்டமைப்பின் சார்பில் அனுப்பப்பட் டதல்ல என்று அதன் பங்காளிக் கட்சிகள் தெரிவித்திருந்தன.
இந்நிலையிலேயே ரெலோவின் மத்திய குழு உறுப்பின ரும் பிரிட்டனின் பொறுப்பாளருமான சாம். சம்பந்தன், இக்கடிதத்திற்கு அரசின் மறைமுக நிகழ்ச்சிநிரல் இருக்கிறதா என்ற இந்த முக்கிய சந்தேகம் ஒன்றைக் கிளப்பியிருக்கிறார்.
சுகிர்தன் பொல்லைக் கொடுத்து அடிவாங்கியிருக்கிறாரா என்ற கேள்வி இப்போது எமக்குள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.
- ஊர்க்குருவி