எரிபொருள் நெருக்கடிக்கு உடனடியாக தீர்வை காணாவிட்டால் முதலாம் திகதி முதல் சேவையில் ஈடுபடுவதை நிறுத்தப்போவதாக அனைத்து இலங்கை பாடசாலை போக்குவரத்து சேவை சங்கம் எச்சரித்துள்ளது.
இதுவரையில் உதவிகள் எதுவும் கிடைக்காத போதிலும் நாங்கள் பரீட்சைகள் கல்வி குறித்த அக்கறை காரணமாக மாணவர்களுக்கு போக்குவரத்து சேவையை வழங்கி வருகின்றோம் என சங்கத்தின் தலைவர் ஹரிச்சந்திர பத்மசிறி தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமைக்கு முன்னர் உரிய தீர்வை முன்வைக்காவிட்டால் வெள்ளிக்கிழமை முதல் சேவையில் ஈடுபடமாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.