அரசாங்கத்தில் மாற்றமொன்றையே நாம் கோரி நிற்கின்றோம்-அனுர பிரியதர்ஷன யாப்பா

0
186

தற்போதைய நிலையில், மிகவும் மோசமான ஒரு நிலைமைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. எனவே, அரசாங்கத்தில் மாற்றமொன்றையே கோரி நிற்பதாக பாராளுமன்ற உறுப்பினர் அனுர பிரயதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

புதிய மாற்றத்துடன்கூடிய சிறந்த எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பிலேயே மக்கள் இந்த அரசாங்கத்தை ஆட்சிக்குக் கொண்டுவந்தனர்.

அதற்காகவே கல்வியலாளர்கள், நிபுணர்களை உள்வாங்கிய வியத்மகவை உருவாக்கினர். இதன்போது தொடர்ந்துரைத்துள்ள அவர்,

எனினும் ஆட்சிக்கு வந்தவுடனேயே கல்வியலாளர்களும் விலகினர் நிபுணர்களும் விலகினர். இறுதியில் அவர்களது குழுவினர் மட்டுமே மிஞ்சினர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.