நல்லாட்சி அரசாங்கத்தில் ஏற்பட்ட தோல்வியின் காரண மாகவே, ராஜபக்ஷக்கள் மீளவும் ஆட்சிக்கு வரும் நிலை யேற்பட்டதாக, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருக்கின்றார். தற்போதைய ஜனாதிபதியின் தலை மையிலான அரசாங்கம் தொடர்பில் சர்வதேசத்திடம் நல்ல அபிப்பிராயம் இல்லையென்றும் மைத்திரி குறிப்பிட்டிருக்கின் றார்.
ராஜபக்ஷக்களுக்கு எதிராக சிங்கள மக்கள் மத்தியில் எதிர்ப்பு ணர்வுகள் அதிகரித்து வருகின்ற சூழலில்தான், மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியிருக்கின்றார். ஆனால், மைத்திரிபால சிறிசேனவும், இந்த அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கியவர்தான். இந்த அரசாங்கத்தின்மீதான குற்றச்சாட்டுக்களுக்கும் விமர்சனங் களுக்கும் மைத்திரிபாலவுக்கும் பொறுப்புண்டு.
ஆனால், ஒரு விடயத்தை ஏற்றுக்கொள்ளலாம். அதாவது, ரணில் – மைத்திரி அரசாங்கம் சர்வதேச சமூகத்தின் ஆதரவை யும் நன்மதிப்பையும் பெற்றிருந்தது உண்மைதான். ஆட்சி மாற்றம் பெரியளவில் நம்பிக்கையை வழங்கியிருந்தது. ஆனால், உள் மோதல்களினால், இலங்கை வரலாற்றில் கிடைத்த அரிய
வாய்ப்பொன்று வீணாகிப்போனது.
மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சிக் காலம் ஒப்பீட்டடிப்படை யில் நல்லாட்சிக்கான கூறுகளை வெளிப்படுத்தியிருந்தது உண்மைதான். ஆனால், மாற்றங்களை, நிரந்தரமான மாற்றங் களாக மாற்றும் வகையில் ரணில் – மைத்திரி தரப்பினர் செயல் படவில்லை. இதன் விளைவாகவே ராஜபக்ஷக்களுக்கான வாய்ப்புக்கள் மீளவும் கிடைத்தன.
கோட்டபாய ராஜபக்ஷ அரசாங்கத்தைப் பொறுத்தவரை யில், ஆரம்பத்திலிருந்தே சிங்கள – பௌத்த மக்களை திருப்திப் படுத்துவது மட்டுமே பிரதான நோக்கம் என்னும் வகையில்தான், அவர்களின் அனைத்து நகர்வுகளும் அமைந்தன. நல்லாட்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதை விடவும், தங்கள் விருப்பங்களின், ஆசைகளின் அடிப்படையிலான, ஆட்சிக்கே ராஜபக்ஷக்கள்
முதன்மையளித்தனர்.
ஜனாதிபதி ராஜபக்ஷவின் விருப்பம், பிரதமர் ராஜபக்ஷவின் விருப்பம், நிதியமைச்சர் ராஜபக்சவின் விருப்பம், விளையாட் டுத்துறை அமைச்சர் ராஜபக்ஷவின் விருப்பம் – என்னும் அடிப்படையில்தான் விடயங்கள் முன்னெடுக்கப்பட்டன. இதன் விளைவுகளையே நாடு தற்போது எதிர்கொண்டு வருகின்றது.
அடிப்படையில் நல்லாட்சி இலங்கையில் தோல்வி யடைந்திருக்கின்றது. யுத்த காலத்தில் ஏற்படும் நெருக்கடிகளுக்கு யுத்தத்தை ஒரு காரணமாக முன்வைக்க முடியும். பொதுவாக யுத்தங்கள் இடம்பெறும் நாடுகளில் பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுவது இயல்பான ஒன்றுதான். ஆனால், இலங்கையின்
நிலைமை முற்றிலும் மாறானது. நல்லாட்சியை நிறுவுவதற்கான வாய்ப்புக்கள் இருந்தும், அதனை சரியாக முன்னெடுக்காமை யினால், நல்லாட்சி முற்றிலும் தோல்வியடைந்திருக்கின்றது. நல்லாட்சி தோல்வியடையும் நாடுகளுடன் பலம்பொருந்திய நாடுகள் ‘டீல்’களை போட முற்படுமேயன்றி, நன்மதிப்புடன் விட யங்களை கையாள முன்வராது. தற்போது இலங்கை இவ் வாறானதொரு நெருக்கடியைத்தான் எதிர்கொண்டிருக்கின் றது.