கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நமது நாட்டு கலைஞர்கள் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுப்பு

0
174

அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நமது நாட்டு கலைஞர்கள் இணைந்து அமைதிவழி ஆர்ப்பாட்டப் பேரணியை இன்று மாலை முன்னெடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணியானது கொழும்பு காலிமுகத்திடல் வரை சென்றது.

கொழும்பு காலிமுகத்திடலில் கடந்த சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்ட இளைஞர் எழுச்சிப் போராட்டமானது இன்று ஒன்பதாவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள், களவாடப்பட்ட எங்கள் எதிர்காலத்தை திருப்பிக்கொடு, நாட்டின் நன்மைக்காக வேண்டி நிலையான அரசாங்கத்தை உருவாக்குகங்கள், வங்குரோத்து நிலையிலிருந்து எமது நாட்டை காப்பாற்றுங்கள், ஐஎம்எப் ஐ அழையுங்கள் உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.