மட்டு.காத்தான்குடியில் காது கேட்கும் கருவிகள் வழங்கல்

0
103

மட்டக்களப்பு காத்தான்குடியில் இமாஸா குழுமம் நிறுவனத்தினால் காது கேட்கும் குறைபாடுள்ளவர்களுக்கு காது கேட்கும் கருவிகளை இலவசமாக வழங்கப்பட்டன.

காத்தான்குடியில் இமாஸா குழுமம் நிறுவனத்தின் அலுவலகத்தில் வைத்து காது கேட்கும் கருவிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் எட்டு பேருக்கு காது கேட்கும் கருவிகள் இன்று வழங்கி வைக்கப்பட்டன.

இமாஸா குழுமம் நிறுவனத்தின் உரிமையாளர் மும்மட் அஜ்வத் கருவிகளை வழங்கியதுடன் இமாஸா குழுமம் நிறுவனத்தின் ஊழியர்கள் கலந்து கொண்டனர்

இதுவரை வறிய குடும்பங்களைச் சேர்ந்த 45 பேருக்கு நான்கு கட்டங்களாககாது கேட்கும் கருவிகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.