லூவிவ் ஏவுகணை தாக்குதலில் 7 பேர் உயிரிழப்பு

0
116

யுக்ரேனின் லூவிவ் நகரில் நேற்று காலை ரஷ்யப்படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது என, லூவிவ் பிராந்திய தலைவர் மக்ஸிம் கோஸிட்ஸ்கி தெரிவித்துள்ளார்.
நான்கு ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டதாகவும், அதில் மூன்று ஏவுகணைகள் கிடங்கு ஒன்றை தாக்கியதாகவும், ஒரு ஏவுகணை வாகன பழுதுபார்க்கும் இடத்தைத் தாக்கியதாகவும் அவர் தெரிவித்தார்.