தேயிலை தோட்டத்தில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!

0
174
Representative image

காலி அக்மீமன பகுதியில் மர்மமான முறையில் உயிரிழந்த பெண்ணொருவரின் சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் வசிக்கும் 53 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர்களது வீட்டில் இருந்து 100 மீற்றர் தொலைவில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

சடலத்தில் வெட்டுக் காயங்கள் காணப்பட்டதுடன், கழுத்தில் வெட்டுக் காயங்களும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று காலை தேயிலை தோட்டத்திற்கு தேயிலை பறிப்பதற்காக சென்ற போது இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்வதற்காக பொலிஸார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கொலைச் சம்பவம் தொடர்பில் அக்மீமன பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.