தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் கொடியேற்றம் நாளை ஆரம்பம்!

0
53

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த பெருந்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. பூர்வ பட்சமும், உத்தர நட்சத்திரமும் கூடிய நன்னாளில் நாளை முற்பகல் 10 மணிக்கு கொடியேற்றம் இடம்பெறவுள்ளது.

தொடர்ந்து 12 தினங்கள் பெருந்திருவிழா நடைபெறவுள்ளத. எதிர்வரும் 13 ஆம் திகதி சப்பரத் திருவிழாவும், 14ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 15 ஆம் திகதி தீர்த்தத்திருவிழாவும் நடைபெறவுள்ளன. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு கொடியிறக்கமும் நடைபெறவுள்ளது.

அடுத்த நாள் 16 ஆம் திகதி காலை 6 மணிக்கு பிராயச்சித்த அபிஷேகம் நடைபெறுவதுடன் அன்றைய நாள் மாலை 3 மணிக்கு வைரவர் திருவிழா மற்றும் பொங்கலுடன் தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தானத்தின் 2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த பெருந்திருவிழா நிறைவடையவுள்ளது.