
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பம் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளது .
இந்த தொழில்நுட்பத்தில் அமெரிக்க நிறுவனங்கள் மட்டுமே கோலோச்சிய நிலையில், தற்போது உலகின் பல்வேறு நாடுகளும் போட்டிபோட்டுக்கொண்டு வருகின்றது.
அந்தவகையில் செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தைப் பயன்படுத்தி தனியார் துறைகளில் முதலீடுகளை மேற்கொள்வதில் இந்தியா அதிக ஆர்வம் காட்டி வருகின்றது.
இந்த தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இது, பலவிதமான தொழில் நுட்பங்களையும் அணுகுமுறைகளையும் பயன்படுத்துகிறது. மேலும், சாதாரண மக்களும் பயன்படுத்தும் வகையில் நாளுக்கு நாள் மேம்பட்ட தொழில்நுட்பத்தை இதன்மூலம் பொறியாளர்களும் தயாரித்து வருகின்றனர்.
இது, சுகாதாரம், நிதி, போக்குவரத்து, உற்பத்தி, வாடிக்கையாளர் சேவை மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் மற்றும் துறைகளில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன……..