29.7 C
Colombo
Saturday, July 12, 2025
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe
Home Blog Page 2

“பொம்மைகளாக இருப்பதை விட வீரப்பெண்ணாக இருப்பதே மகிழ்ச்சி!”

0

வெற்றிபெற்று பொம்மைகளாக இருப்பதைவிட தோல்வியடைந்து வீர பெண்ணாக இருப்பதே மகிழ்ச்சி என   சந்திரசேகரன்  மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்தார்.

கடந்த தேர்தல்களில் வெற்றி வெற்று, பொம்மைகளாக இருப்பதை விட தோல்வி அடைந்து வீர பெண்ணாக இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக   தெரிவித்துள்ளார்

சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் அனுஷா சந்திரசேகரன் தலைமையில்   நோர்வூட் வெஞ்சர் ஆலய மண்டபத்தில், வியாழக்கிழமை (10)  இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

நிகழ்வில் சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் உப-தலைவர் டொமினிக், தேசிய அமைப்பாளர் விக்னேஷ்வரன், பிரதேச சபை உறுப்பினர் ஆறுமுகம் தியாகராஜா,  அமைப்பாளர்களான சதீஸ்குமார், கேதீஸ், தேவராஜ், விஜயராகவன் உட்பட இளைஞர், மகளிர் அணி சார்பிலும், தோட்ட கமிட்டி தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் பங்கு கொண்டிருந்தனர்.இதன்போது மேலும் கருத்து தெரிவித்த பொதுச்செயலாளர்.

கடந்த முறை நாம் மைக் சின்னத்தில் போட்டியிட்ட போது நிறைய பேர் என்னிடம் கேட்டார்கள், அரசாங்கத்தோடு நீங்கள் சேர்ந்து கேட்டிருந்தால் வெற்றியடைந்திருப்பீர்கள், தனியாக கேட்டதால் தான் தோல்வியடைந்து விட்டீர்கள் என்று

இன்று அரசாங்கத்தின் பேரலையில வெற்றி பெற்ற நிறைய பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த மலையகத்தின் நுவரெலியா மாவட்டத்தில் இருக்கிறார்கள். ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.

 என்றைக்கு அரசாங்கம்ஆணை கொடுக்கும் மக்களுக்கு சேவை செய்யலாம் என்று அரசாங்க மேல் மட்ட ஆணைக்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு சேவை செய்வதை போல் தெரியவில்லை, என்னைக்கு ஆணை கிடைக்கும் அந்த ஆணை வந்தவுடன் சேவை செய்வோம் என ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களும் காத்துக்கொண்டிருக்கிறார்கள்.

வெற்றி பெற்று இப்படி பொம்மையாக இருப்பதை விட தோல்வியடைந்து வீர பெண்ணாக இருப்பது எனக்கு மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.

தோல்வியடைந்தாலும்  விதையாக பிரதேச சபை ஆசனங்களை பெற்றிருக்கிறோம்.   இந்த விதை இன்னும் பெரிய விருட்சமாக மாறும். அதை மாற்றாமல் என்னுடைய தந்தை சந்திரசேகரன் எப்படி ஓயவில்லையோ அதேபோன்று தலைவர் சந்திரசேகரனுடைய ஆசையின் படி அவருடைய ஆசியோடு அவருடைய கனவை நனவாக்காமல் இந்த அனுஷா சந்திரசேகரன் ஒருபோதும் ஓயமாட்டேன்.

 உங்களுடைய வாக்குகளால் தான் எங்களுடைய கட்சியின் வெற்றி சாத்தியம் ஆக்கப்பட்டிருக்கிறது. எங்களுடைய என்பதை விட நம்முடைய கட்சி, நமது மாற்றம், நம்முடைய கட்சியின் வளர்ச்சி உங்களால் தான் சாத்தியமாகியது. ஆகவே என் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன் என தெரிவித்தார்.

சிறுமியை வன்புணர்ந்த மைத்துனர் கைது!

0

பத்தாம் வகுப்பில் படிக்கும் பதினைந்து வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக பொலிஸ் அவசர நடவடிக்கை பிரிவுக்கு புதன்கிழமை (09)   முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம், புத்தள பொலிஸ் பிரிவின் உனவட்டுன பகுதியில் இடம்பெற்றுள்ளது.

அந்தச் சிறுமி குடும்பத்தில் மூன்றாவது பிள்ளை, அவளுக்கு இரண்டு மூத்த சகோதரிகள் மற்றும் ஒரு தம்பி உள்ளனர்.

அவருடைய தாயும் தந்தையும் கூலித் தொழிலாளிகளாக வேலை செய்கிறார்கள். அவளுடைய , ஜூன் 4 ஆம் திகதி தாமரை பூ பறிக்க   வீட்டிற்கு வருமாறு அச்சிறுமியின் சகோதரி அழைத்துள்ளார்.  

அதன்படி, அவள் புத்தள உனவடுனவில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு வந்திருந்தாள். அந்த நாளில், சகோதரியின் கணவரும் புத்தள நகர சந்தைக்குச் சென்றனர்.

சிறிது  தூரம் சென்ற போது, பணத்தை மறந்து வீட்டிலேயே விட்டுவிட்டு வந்துள்ளதாக தன்னுடைய மனைவியிடம் தெரிவித்துவிட்டு அவளுடைய கணவர் (மைத்துனர்) வீட்டுக்குத் திரும்பி வந்துள்ளார்.

வீட்டின் ஓர் அறையில் சிறுமி தூங்கிக் கொண்டிருந்தாள். அறைக்குள் நுழைந்து அவளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

சந்தேக நபரைக் கைது செய்ய புத்தள பொலிஸார் விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.

ட்ரம்பின் தீர்வை வரி: சஜித் அதிரடி அறிவிப்பு!

0

எமது நாட்டு ஏற்றுமதிகளில் 26.4% பங்களிப்பைப் பெற்றுத் தரும் ஏற்றுமதி தலமாக அமெரிக்கா திகழ்ந்து வருகிறது. ஆடைத்துறையில் 60% ஏற்றுமதி தலமாகவும் அமெரிக்கா நாடே இருந்து வருகிறது. தீர்வை வரியை 44% இலிருந்து 30% ஆகக் குறைந்தமை நல்லதொரு விடயமாகும்  என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வௌ்ளிக்கிழமை (11) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

என்றாலும், எங்களுடன் ஏற்றுமதி போட்டியாளர்களாக இருந்து வரும் நாடுகளுடன் ஒப்பிடும்போது நாம் பெற்ற வரிச் சலுகை நியாயமானது தானா என்பது குறித்தும் நாம் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்றும் கூறினார்.

ஜப்பான் 25%, மால்டோவா 25%, புரூணை 25%, தென் கொரியா மற்றும் கஸகஸ்தான் 25%, இந்தியா 26% என்ற வகையில் இந்நாடுகள் தமது தீர்வை வரிகளைக் குறைத்துக் கொண்டுள்ளன. நாம் இந்தியா வங்காளதேசம் போன்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும்.

அடுத்த 3 வாரங்களுக்குள் நாம் ஆழமான இராஜதந்திர தலையீட்டை மேற்கொண்டே ஆக வேண்டும். நாம் வெள்ளை மாளிகையுடன் நேரடியான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு, இந்த வரிச் சலுகைகளை இன்னும் குறைந்த மட்டத்தில் பெற வேண்டும்.

நாட்டிற்கு சிறந்த இணக்கப்பாட்டை பெறுவதற்கு, கட்சி பேதமின்றி ஐக்கிய மக்கள் சக்தி தமது ஒத்துழைப்பைப் பெற்றுத் தரும். இந்த வரிகளால் நாட்டிற்கு ஏற்படும் பாதிப்புகளை இல்லாமலாக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.    

கெஹெலிய மீதான குற்றச்சாட்டுகள் செப்டம்பர் ஒப்படைக்கப்படும்!

0

தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசி அளவுகளை வாங்கியது தொடர்பாக முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் பிற பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றப்பத்திரிகைகளை ஒப்படைப்பதை செப்டம்பர் 16 ஆம் திகதி வரை ஒத்திவைக்க மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, வெள்ளிக்கிழமை (11) முடிவு செய்தது.

சட்டமா அதிபர் விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர் இந்த முடிவை நீதிபதி அமர்வு எடுத்தது.

“வேரூன்றிய ஒரு தேசமாக கட்டியெழுப்புவோம்!”

0

வரலாற்று பாரம்பரியத்துடன் இயல்பான உறவு இல்லாமல் ஒரு சமூகமாக முன்னேறுவது சாத்தியமில்லை என்றும், அதற்கேற்ப நாட்டின் அபிவிருத்திப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

வரலாற்றுச் சிறப்புமிக்க ருஹுனு கதிர்காமம் புனிதஸ்தலத்தில் வியாழக்கிழமை (10) பிற்பகல் இடம்பெற்ற வைபவத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

  வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம விகாரைக்குச் சென்று மத அனுஷ்டானங்களில் ஈடுபட்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அதன் பின்னர் வரலாற்றுச் சிறப்புமிக்க கிரிவெஹெர ரஜமகா விஹாரையின் விகாராதிபதி வண, கொபவக தம்மிந்த நாயக்க தேரரைச் சந்தித்து நலம் விசாரித்ததுடன், சிறு உரையாடலிலும் ஈடுபட்டார்.

ருஹுணு கதிர்காம  தேவாலயத்தில் நடைபெறும் வருடாந்த எசல பெரஹெராவின் இறுதி ரந்தோலி பெரஹெராவை பார்வையிட்ட  ஜனாதிபதி, ஹஸ்திராஜா யானை மீது புனித கலசத்தை வைத்தார். அதன் பின்னர் நடைபெற்ற வைபவத்தில்  உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஒரு நாட்டை அதன் வரலாற்று பாரம்பரியத்தின் அடிப்டையில்  மாத்திரமே முன்னோக்கி கொண்டு செல்ல முடியும் என்றும் தெரிவித்தார்.

உலகில் வளர்ச்சியடைந்ததாகக் கருதப்படும் ஒவ்வொரு நாடும் அதன் வரலாற்று பாரம்பரியத்தைப் பாதுகாப்பதுடன் அதன் மீது கட்டியெழுப்புவதன் மூலமே அந்த வளர்ச்சியை அடைய எதிர்பார்க்கிறது என்பதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, ஒரு நாடாக, நாமும் நமது வரலாற்று பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டு அபிவிருத்திப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும்  தெரிவித்தார்.

நமது சமூகத்தை  ஒரு கலாசார சமூகமாக மாற்ற புத்த மதம்  உதவியது என்றும், பௌதீக வளங்களை முழுமைப்படுத்த முயற்சிக்கும் சமூகத்தில், மறைந்து வரும் சமூக  மதிப்புகள் மற்றும் பண்புகள் மீண்டும் மீட்சிபெற, இவ்வாறான கலாசார நிகழ்வுகள் வாயப்பளிக்கிறது என்றும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்.

2186 வருடங்களாக இந்த ருஹுனு கதிர்காம பெரஹரா  சுமார் நூறு தலைமுறையாக நடைபெற்றுவருவதுடன், இந்த கலாசார நிகழ்விற்கும் மக்களின் வாழ்வியலுக்கும் உள்ள தொடர்பு காரணமாகவே இந்த பெரஹராவை நடத்துவது சாத்தியமாகியுள்ளதாக இங்கு  சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இம்முறை பெரஹெராவை வெற்றிகரமாக நடத்துவதற்கு பங்களித்த விகாராதிபதி தேரர் உட்பட அனைவருக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.

வர்த்தக, வாணிப,  உணவுப் பாதுகாப்பு பிரதி அமைச்சர் ஆர்.எம். ஜயவர்தன, ஊவா மாகாண ஆளுநர் சட்டத்தரணி கபில ஜயசேகர, பாராளுமன்ற உறுப்பினர் ருவன் விஜேவீர, கதிர்காமம் பிரதேச சபையின் தவிசாளர் தர்மபால ஹேரத், மொனராகலை மாவட்ட செயலாளர் பசன் ரத்நாயக்க உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில்  கலந்துகொண்டனர்.  

1,500 பெண்களை மதம் மாற்றிய ஜுங்கூர் பாபா!

0

உத்தர பிரதேச மாநிலம் லக்​னோ​வில் விஷ்வ இந்து ரக் ஷா பரிஷத் சார்​பில் முஸ்​லி​மாக மதம் மாறிய 12 பேர் தாய் மதமான இந்து மதத்​துக்கு திரும்​பும் நிகழ்ச்சி கடந்த 3-ம் திகதி நடை​பெற்​றது.

அவர்​களிடம் நடத்​தப்​பட்ட விசா​ரணைக்​குப் பிறகு, பல்​ராம்​பூரை சேர்ந்த ஜுங்​கூர் பாபா, அவரது மகன் ஹுசைன் மற்​றும் நெருங்​கிய நண்​பர் நீத்து நவீன் ரொஹ​ரா(எ) நஸ்​ரின் உள்​ளிட்​டோர் கைது செய்​யப்​பட்​டனர்.

இந்த வழக்​கில் ஏடிஎஸ் படை​யினர் 14 பேரை தேடி வரு​கின்​றனர். ஜுங்​கூர் பாபா​வால் மதம் மாற்​றம் செய்​யப்​பட்​ட​வர்​களிடம் ஏடிஎஸ் படை​யினர் நேரில் விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

மும்​பை​யில் ஒரு பிரபல தர்கா​வுக்கு வெளியே ஜுங்​கூர் பாபா, மோதிரங்​களை விற்று வந்​துள்​ளார். அப்​போது​தான் அவருக்கு துபாய் உள்​ளிட்ட வளை​குடா நாடு​களில் மதம் மாற்​றத்​துக்கு நிதி அளிக்​கும் அமைப்​பு​களு​டன் தொடர்பு ஏற்​பட்​டுள்​ளது. அவர்​கள் உதவி​யால் ஜுங்​கூர் பாபா, மகா​ராஷ்டி​ரா​வில் மதம் மாற்​றத்​தில் ஈடு​பட்​டுள்​ளார்.

பிறகு உ.பி.​யின் பல்​ராம்​பூரில் குடியேறி மதம் மாற்​றும் செயலில் ஈடு​பட்டு வந்​துள்​ளார். ஜுங்​கூர் பாபா வழக்கை விசா​ரிக்​கும் ஏடிஎஸ் படை வட்​டாரங்​கள் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் கூறும்​போது, “நான்​கா​யிரம் பேரை ஜுங்​கூர் பாபா குறி வைத்​து, 1,500-க்​கும் மேற்​பட்ட பெண்​களை முஸ்​லி​மாக மதம் மாற்றி உள்​ளார்.

அவரது உறவினர்​கள், நெருங்​கிய​வர்​கள் பல இடங்​களில் மக்​களை இஸ்​லாத்​தில் சேர ஊக்​குவிக்​கும் நிகழ்ச்​சிகளை நடத்​தி​ உள்ளனர். கடந்த 2 ஆண்​டு​களுக்கு முன்​பு, ஆஸம்​கரில் சட்​ட​விரோத மதம் மாற்​றம் தொடர்​பாக ஜுங்​கூர் மற்​றும் அவரது உறவினர்​கள் பலர் மீது வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது. ஆனால், வழக்​கு​களில் இருந்து தப்​பிக்க காவல் துறை, நிர்​வாகம் மற்​றும் உளவு அதி​காரி​கள் சிலருக்கு அதிக பணம் கொடுத்​துள்​ளார்” என்று தெரி​வித்​தனர்.

கைது செய்​யப்​பட்ட ஜுங்​கூர் பாபா உள்​ளிட்​டோரை ஏடிஎஸ் சிறப்பு நீதி​மன்ற நீதிபதி ஹுசைன் அகமது அன்​சாரி முன்பு அதி​காரி​கள் ஆஜர்​படுத்​தினர். இதையடுத்து அவர்​களை 7 நாட்​கள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

செம்மணியில் 65 எலும்புக்கூடுகள்: சிதிலங்கள் காணப்பட்டன!

0

செம்மணி மனித புதைகுழியில் இருந்து இதுவரையில் மீட்கப்பட்ட எலும்பு கூடுகளின் எண்ணிக்கை 65ஆக உயர்வடைந்துள்ளது.

அதேவேளை இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் கடந்த 15 நாட்களாக தொடர்ச்சியாக இடம்பெற்று வந்த நிலையில் ,   வியாழக்கிழமை (10) மதியத்துடன் , அகழ்வு பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டு , எதிர்வரும் 21ஆம் திகதி முதல் மீள அகழ்வு பணிகளை முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் 15ஆம் நாள் பணிகள்  வியாழக்கிழமை (10)  முன்னெடுக்கப்பட்டது.

அதன் போது, புதைகுழிகளில் அடையாளம் காணப்பட்ட 65 மனித எலும்பு கூட்டு தொகுதிகளும் முற்றாக  அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் அகழ்வு நடவடிக்கைகள் வியாழக்கிழமை (10) யுடன்  24 நாட்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதில் “தடயவியல் அகழ்வாய்வு தளம் இல – 01”  மனித புதைகுழியில் இருந்து 63 எலும்பு கூடுகளும் ,  “தடயவியல் அகழ்வாய்வு தளம் இல – 02”  மனித புதைகுழியில் இருந்து இரண்டு எலும்பு கூடுகளும் மீட்கப்பட்டுள்ளன.

அதேவேளை  “தடயவியல் அகழ்வாய்வு தளம் இல – 02”  புதைகுழியில் குழப்பகரமான முறையில் மனித எலும்பு சிதிலங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

மீட்கப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகள் அனைத்தும் சட்ட வைத்திய அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், புதைகுழிகளில் இருந்து மீட்கப்பட்ட , பை , காலணிகள் , கண்ணாடி வளையல்கள் , ஆடையை ஒத்த துணிகள் , பொம்மை உள்ளிட்ட பொருட்கள் சான்று பொருட்களாக அடையாளப்படுத்தப்பட்டு , நீதிமன்ற கட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளன.

அருள் வந்து ஆடியவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

0

ஏறாவூர் களுவங்கேணி பிரதேசத்தில் பேச்சியம்மன் கோவிலில் இடம் பெற்ற வருடாந்த சடங்கின் போது தெய்வம் ஆடிய ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து  உயிரிழந்ததுடன் ஒருவர் மீது தெய்வம் ஆடிய ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்தியதை அடுத்து அவர்  படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் வியாழக்கிழமை (10) இரவு 9.30 மணிக்கு இடம் பெற்றதை அடுத்து அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. 

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள களுவங்கேணி சிங்காரதோப்பு கிராமத்தில் உள்ள பேச்சியம்மன் ஆலயத்தில் வருடாந்த திருவிழாவின் இறுதி நாள் சடங்கு சம்பவ தினம் வியாழக்கிழமை (10) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்றது

இதன் போது பக்தர்கள் ஆலயத்தினுள் தெய்வம்ஆடிக் கொண்டிருந்தபோது 37 வயதுடைய நிமலன் என்பவர் திடீரென மயங்கி விழுந்ததை அடுத்து அவர் அங்கு உயிரிழந்தார். இதையடுத்து அங்கு தெய்வம் ஆடிக் கொண்டிருந்த ஒருவர் மீது இன்னொருவர் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தியதில் அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு  போதனா வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டார். தாக்குதலை மேற்கொண்டவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

  உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக  வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

2.34% பரீட்சார்த்திகள் அனைத்துப் பாடங்களிலும் பெயில்!

0

2024 (2025) க.பொ.த சாதாரண தர (சா/த) பரீட்சைகள் பெறுபேறுகளின் பிரகாரம் 2.34% பரீட்சார்த்திகள் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையவில்லை என்றும், தேர்வெழுதிய மாணவர்களில் 73.45% பேர் க.பொ.த உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே இன்று (11) அறிவித்தார். ஊடகங்களுக்கு உரையாற்றிய அவர், 2.34% பரீட்சார்த்திகள் அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையவில்லை என்றும், மொத்தம் 13,392 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ‘ஏ’ சித்திகளைப் பெற்று சிறந்த முடிவுகளைப் பெற்றுள்ளனர் என்றும், இது மொத்த பரீட்சார்த்திகளில் 4.15% ஆகும் என்றும் தெரிவித்தார். மாகாண வாரியாகப் பெறுபேறுகளைப் பிரித்தால், தென் மாகாணம் 75.64% ஆகவும், மேல் மாகாணம் 74.47% ஆகவும், மத்திய மாகாணம் 73.91% ஆகவும் அதிகபட்ச தேர்ச்சி விகிதத்தைப் பதிவு செய்தது.

மிகக் குறைந்த மாகாண தேர்ச்சி விகிதம் வடக்கு மாகாணத்தில் 69.86% ஆகவும் பதிவாகியுள்ளது. மாகாண தேர்ச்சி சதவீதங்கள்: தெற்கு – 75.64% மேற்கு – 74.47% மத்திய – 73.91% கிழக்கு – 74.26% சபரகமுவ – 73.44% ஊவா – 73.14% வடமேற்கு – 71.47% வட மத்திய – 70.24% வடக்கு – 69.86% பாட வாரியான செயல்திறனில், 69.07% மாணவர்கள் கணிதத்திலும், 71.06% மாணவர்கள் அறிவியலிலும், 73.82% மாணவர்கள் ஆங்கிலத்திலும் தேர்ச்சி பெற்றனர். பாடத்தின் அடிப்படையில் தேர்ச்சி விகிதங்கள்: பௌத்தம் – 83.21% சைவம் – 82.96% கத்தோலிக்கம் – 90.22% கிறிஸ்தவம் – 91.49% இஸ்லாம் – 85.45% ஆங்கிலம் – 73.82% சிங்கள மொழி & இலக்கியம் – 87.73% தமிழ் மொழி & இலக்கியம் – 87.03% வரலாறு – 82.17% அறிவியல் – 71.06% கணிதம் – 69.07% இந்த முடிவுகள் நாடு முழுவதும் உள்ள மாணவர்களின் ஒட்டுமொத்த செயல்திறன் போக்குகளைப் பிரதிபலிக்கின்றன என்றும், மேலும் விரிவான பகுப்பாய்வு வரும் நாட்களில் கிடைக்கும் என்றும் ஆணையாளர் நாயகம் கூறினார்

2025 உ/த பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!

0

2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை 2025‌ நவம்பர் 10 முதல் டிசம்பர் 5, வரை நடைபெறும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி அறிவித்துள்ளார். இதற்கிடையில், 2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை 2026 பெப்ரவரியில் நடைபெறும். பரீட்சைகள் விண்ணப்ப காலக்கெடு மற்றும் நடைமுறைகள் தொடர்பான கூடுதல் விவரங்கள் வரும் வாரங்களில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது