ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மிகக்கனமழை கொட்டித் தீர்த்தது.
தெஹ்ரான், ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரான் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மிகக்கனமழை கொட்டித் தீர்த்தது. அதில் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் சிக்கி 24 பேர் பலியாகினர் என்றும் 19 பேரின் நிலை என்ன என்று தெரியவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. ஈரானில் மேலும் சில நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், கடந்த 2 நாட்களாக பெய்த மிகக் கனமழையால் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் அங்கு கனமழை பெய்தது. குறிப்பாக இஸ்டபென் நகரில் கனமழை கொட்டித்தீர்த்தது. கனமழை காரணமாக அந்நகரில் உள்ள ரவுட்பெல் ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள குடியிருப்புகள், சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. இந்நிலையில், இந்த திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரானில் கனமழை – 24 பேர் பலி; காணாமல் போன 19 பேரை தேடும் பணி தீவிரம்!
சுத்தமான சூழலில் வாழ்வது அடிப்படை உரிமை – ஐ.நா. சபையில் தீர்மானம்
சுத்தமான சூழலில் வாழ்வது அடிப்படை உரிமை என்ற தீர்மானம் ஐ.நா பொது சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஜெனீவா, சுத்தமான சூழலில் வாழ்வது அடிப்படை உரிமை என்று ஐ.நா பொது சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஓர் எதிர்ப்பும் இல்லாமல் இந்த தீர்மானம் ஐ.நா பொதுச் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தற்கு 161 நாடுகள் ஆதரவு அளித்தன. ஒரு நாடு கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. சீனா, ஈரான், ரஷ்யா கூட்டமைப்பு உள்ளிட்ட நாடுகள் இதில் கலந்து கொள்ளவில்லை. இந்த தீர்மானத்தின்படி சுத்தமான, பாதுகாப்பான, ஆரோக்கியமான ஒரு சூழலில் வாழ்வது என்பது ஓர் அடிப்படை மனித உரிமையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானத்தின்படி காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளுக்கு உலக அளவில் ஒரு தீர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. குறிப்பாக, இந்த தீர்மானத்தின்படி ஐ.நா. சபை உறுப்பு நாடுகள் சுற்றுச்சூழலை பாதுகாத்து, காலநிலை மாற்றத்தை தடுத்து சுத்தமான, பாதுகாப்பான, ஆரோக்கியமான ஒரு சூழலிலை எற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆயுதக் குழுக்கள் மோதல்: 27 போ் பலி
சிரியாவின் ஸ்வேய்டா மாகாணத்தில் உள்ளூா் ஆயுதக் குழுக்களுக்கும் அரசு ஆதரவுப் படையினருக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 27 போ் பலியாகினா்.
கடந்த 2011-ஆம் ஆண்டு தொடங்கிய உள்நாட்டுப் போரின்போது கூட அமைதி நிலவிய அந்த மாகாணத்தில், வன்முறைச் சம்பவங்கள் மிகவும் அரிதானதாகும். எனினும், சாலைகளில் பணம் வசூலித்தல், பணத்துக்காக ஆள்களைக் கடத்துதல் போன்ற செயல்களில் அரசு ஆதரவுப் படையினா் ஈடுபட்டு வந்தது பொதுமக்களை கொதிப்படையச் செய்தது.
இந்தச் சூழலில், பொதுமக்களில் ஒருவரை அரசு ஆதரவுப் படையினா் அண்மையில் கைது செய்தனா். அதையடுத்து உள்ளூா் ஆயுதக் குழுவினருக்கும் அரசு ஆதரவுப் படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் 27 போ் உயிரிழந்தனா்.
இரு குழுக்களுக்கும் இடையே அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா்.
காபூல் கிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்பு: நால்வர் காயம்
ஆப்கனில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் நால்வர் படுகாயம் அடைந்தனர்.
ஆப்கன் தலைநகர் காபூலில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் ஷ்பகேஸா டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற போட்டியில் பேண்ட் இ அமிர் டிராகன்ஸ், பாமிர் சால்மி அணிகள் விளையாடிக்கொண்டிருந்தன.
அப்போது மைதானத்தில் திடீரென குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.
இதனால் வீரர்கள், பார்வையாளர்கள் உள்ளிட்டோர் அச்சமடைந்தனர். உடனடியாக மைதானத்தில் இருந்த அனைவரும் பாதுகாப்பான இடத்துக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். இருப்பினும், இச்சம்பவத்தில் ரசிகர்கள் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதனிடையே வீரர்கள், போட்டி அமைப்பாளர்கள் நலமுடன் இருப்பதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரிய வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது. தாக்குதல் நடந்தபோது ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் மைதானத்தில் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
உக்ரைன் தாக்குதலில் 40 உக்ரைனியப் போர்க் கைதிகள் உயிரிழப்பு
பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ள டொனெட்ஸ்க் ஒலெனிவ்காவில் உள்ள சிறைச்சாலையில் உக்ரேனியப் படைகள் நடத்திய ரொக்கட் தாக்குதலில் 40 உக்ரேனிய போர் கைதிகள் கொல்லப்பட்டதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 75 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் குற்றம் சாட்டினர். அத்துடன் இத்தாக்குதல்கள் அமெரிக்கா வழஙகிய ஹிமார்ஸ் பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.
இத்தாக்குதலை உக்ரைன் இராணுவம் மறுத்துள்ளது. அத்துடன் இத்தாக்குதலை ரஷ்யாவே நடத்தியதாக குற்றம் சாட்டியது. அந்த இடத்தில் சித்திரவதை செய்யப்பட்டதற்கான ஆதாரங்களை மறைக்க ரஷ்யா முயல்வதாக உக்ரைன் கூறியது.
நுணாவில் IOC ல் நாளையும் QR Code அடிப்படையில் பெற்றோல் விநியோகம்!
நாளை குறித்த கிராம சேவகர் பிரிவிற்கு நுணாவில் IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் விநியோகம்!
யாழ்.தென்மராட்சி நுணாவில் IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நாளைய தினம் இரண்டாம் நாள் QR Code அடிப்படையில் பெற்றோல் விநியோகிக்கப்படவுள்ளது.
அதற்கமைவாக, தென்மராட்சி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள J/303 முதல் J/330 வரையான கிராம அலுவலர் பிரிவுகளுக்கும்,யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த சட்டத்தரணிகளுக்கும் நாளை 30 ஆம் திகதி சனிக்கிழமை பெற்றோல் விநியோகிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கு அமைவாக 0,1,2ஆகிய வாகன பின்னிலகங்களுக்கு நாளைய தினம் பெற்றோல் விநியோகிக்கப்படவுள்ளது.
மேலும், கிராம அலுவலர் பிரிவை உறுதிப்படுத்துவதற்காக கிராம சேவகர்களால் வழங்கப்பட்ட எரிபொருள் அட்டை மற்றும் வாகனத்தை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணத்தை தம்வசம் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ் விடயந் தொடர்பாக கருத்து தெரிவித்த நுணாவில் IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் நாம்
இன்றைய தினம் மேல் குறிப்பிட்ட நடைமுறை மூலம் மக்களுக்கு எரிபொருளினை வழங்கியிருந்தோம் மக்களும் சிரமமின்றி எரிபொருளினை ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தது இவ்வாறான நடைமுறையில் இனி வரும் காலங்களிலும் தொடர்ச்சியாக எரிபொருளை வழங்குவதற்கு திட்டமிட்டுள்ளோம் எனவும் வாடிக்கையாளர்களின் வீண் சிரமத்தையும் ஏமாற்றத்தையும் தவிக்கும் முகமாகவே இவ்வாறான ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது எனவும் தெரிவித்ததுடன் .
ஏனைய கிராம அலுவலர் பிரிவுகளுக்கும் சுழற்சி முறையில் எரிபொருள் வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்ட பிரிவுகளை தவிர்ந்த ஏனையவர்கள் வருக தந்து ஏமாற்றம் அடைவதை தவிர்த்துக் கொள்ளவும் எனவும் தெரிவித்தார் .
அத்துடன் யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த வாகன பின்னிலக்கங்களைக் கொண்ட சட்டத்தரணிகளும் நாளைய தினம் எரிபொருளை பெற்றுக் கொள்ள முடியும்-என்றார்.
[20:31, 29/07/2022] Siva Rading Company Boss: Saturday Fuel Time Table J/303 _ 09.00 am to 09.30 am. J/304,305_ 09.30 am to 10.00 am J/306 10.00 am to 10 30am J/307,308 10.30 am to 11.00 am. J/309 _ 11.00 am to 11.30 am J/310 ,311_ 11.30 am to 12.00 pm J/312,313 _ 12.30 pm to 01.00pm J314, 315 _ 01.30 pm to 02.00 pm J/316 317 _ 02.00 pm to 02.30 pm J/318,319 _ 02.30 pm to 03.00 pm J/321,320 – 03.00 pm to 03.15 pm J/323,324- 03.15 pm to 03.30 pm J/325,326 – 03.45 pm to 03.45 pm J/327,328 – 03.45 pm to 04.00pm
J/329,330 – 04.oo pm to04.30 pm
தமிழர்களின் அரசியல் உரிமையுடன் கூடிய அரசியலை செய்கிறேன்: இரா.சாணக்கியன்
எனது அரசியல் தமிழர்களின் அரசியல் உரிமையுடன் கூடிய எதிர்காலத்தினை நோக்கி இருக்குமே தவிர வேறு எதுவும் இருக்காது.ஒரு சிலரின் அரசியல் தாங்கள் தொடர்ந்து பாராளுமன்ற உறுப்பினராகயிருக்கவேண்டும் என்பதே நோக்கமாகவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
ஒரு சிலருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியினை விடுத்துவேறு எதுவும் தெரியாது எனவும் அவர் தெரிவித்தார்.
இன்று மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடியில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டம் மீண்டும் கொண்டுவரப்பட்டபோது அதற்கு தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஆதரவாக வாக்களித்தமை தொடர்ந்து அந்த சமூகங்கள் அவர்கள் தொடர்பில் அவதானமாக எதிர்காலத்தில் செயற்படவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
சர்வதேச கண்டல் தினத்தை
முன்னிட்டு கண்டல் தாவரம் நடுகை
சர்வதேச கண்டல் தினத்தை முன்னிட்டு கண்டல் தாவரங்கள் நடுகை செய்யப்பட்டன.
அம்பாறை மாவட்ட அக்கரைப்பற்று பிராந்திய வனவள பிராந்தியத்தினால் காரைதீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கண்டல் ஒதுக்கவனப் பிரதேசத்தில் பிராந்திய வன அதிகாரி ஏ.எல்.இலியாஸ் தலைமையில் கண்டல் நடுகை இடம் பெற்றது.
ஜூலை மாதம் 26ஆம் திகதி சர்வதேச கண்டல் சர்வதேச கண்டல் தினம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த முன்னிட்டு இவ் வருடத்திற்கான இன்று வனபரிபாலனத் திணைக்களத்தினால் கண்டல் நடுகை செய்யப்பட்டன.
நிகழ்வில் பிரதம அதிதியாக காரைதீவுப் பிரதேச செயலாளர் எஸ்.ஜெகராஜன் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்கள் வன பரிபாலத் திணைக்களத்தின் உத்தியோகஸ்தர்கள் காரைதீவு இராமகிருஸ்னமிஸன் பெண்கள் பாடசாலை மாணவிகள் பிரதேசவாசிகள் கலந்து கொண்டனர்.
அமரர் நீலன் திருச்செல்வம் அவர்களது 23வது ஆண்டு நினைவேந்தல்!


முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான அமரர் நீலன் திருச்செல்வம் அவர்களது 23வது ஆண்டு நினைவேந்தல் இன்றையதினம் நடைபெற்றது.
மூளாய் பகுதியில் உள்ள, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களது இல்லத்திலே இந்த நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
இதன்போது ஈகைச்சுடரேற்றி, அன்னாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி, இரண்டு நிமிட அக வணக்கத்துடன் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில், முன்னாள் யாழ். மாநகரசபை உறுப்பினர் தங்க முகுந்தன் அவர்களது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், முன்னாள் வடக்கு மாகாண சபையின் உறுப்பினர் கஜதீபன் மற்றும் அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையினர் கலந்து கொண்டனர்.
நாட்டில் மேலும் 5 கொரோனா மரணங்கள் பதிவு!
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி நேற்றைய தினம் மேலும் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உறுதிப்படுத்தலுடன் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அரசாங்கத் தகவல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 143 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய, கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 665,543ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.