32 C
Colombo
Saturday, March 15, 2025
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe
Home Blog Page 5734

டீ.ஏ.ராஜபக்ஷவின் 53ஆவது நினைவு தின நிகழ்வு இன்று

0

அமரர் டீ.ஏ.ராஜபக்ஷவின் 53ஆவது நினைவு தின நிகழ்வு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று தங்காலையிலுள்ள டீ.ஏ.ராஜபக்ஷவின் உருவச்சிலையடியில் இடம்பெற்றது.
இந்த நினைவு தின நிகழ்வு, பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்புடன் கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில் முறையான சுகாதார வழிகாட்டல்களுடன், வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களுடன் மிகவும் எளிமையாக இடம்பெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் விசேட யாக பூஜை வழிபாடுகள்

0

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரதான சத்திரசிகிச்சை கூடத்தின் ஏற்பாட்டில் விசேட யாக பூஜை வழிபாடுகள் நடாத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்றுநோய் இலங்கை நாட்டில் இருந்து நீங்கி மக்கள் சுபீட்சமான வாழ்வுக்கு செல்ல ஆசி வேண்டி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பிரதான சத்திரசிகிச்சை கூடத்தின் ஏற்பாட்டில் விசேட யாக பூஜை வழிபாடுகள் இன்று நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை ஸ்ரீ பழனி ஆண்டவர் ஆலயத்தில் வைத்தியசாலை பிரதான சத்திரசிகிச்சை கூடத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற விசேட யாக பூஜையானது ஆலய பிரதம குரு பகிரதன் சர்மா தலைமையில் சுகாதார வழிமுறைக்கமைய பொதுமக்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையில் வழிபாடுகள் நடைபெற்றது.

கொரோனா வைரஸ் நாட்டிலிருந்து விடுவித்து சுபீட்சமான ஒரு நாட்டை கட்டியெழுப்பி மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்புவதற்கு இறை பிராத்தனை மேற்கொள்ளும் செயற்திட்டத்தின் நடாத்தப்பட்ட விசேட யாக பூஜை வழிபாட்டு நிகழ்வில் போதனா வைத்தியசாலை பிரதான சத்திரசிகிச்சை பிரிவு வைத்திய நிபுணர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், சுகாதார உதவியாளர்கள் கலந்துகொண்டனர்.

போலிச் செய்திகளைப் பரப்பினால் 5 வருடங்கள் சிறை – அஜித் ரோஹண

0

தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளின் போது போலிச் செய்திகளைப் பரப்பினால் ஐந்து வருடங்கள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண எச்சரித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இவ்வாறு எச்சரித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முன்னெடுக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தல், நடவடிக்கைகளின் போது எவரேனும் ஒருவர் அவருடைய பெயர் அல்லது முகவரி தொடர்பில் தவறான விவரங்களை வழங்கினால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கமுடியும்.

இதேவேளை, தன்னைப் பிறிதொரு நபரைப் போன்று அடையாளப்படுத்தினாலும், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கமுடியும். இது தனிமைப்படுத்தல் சட்ட விதிகளுக்கமைய குற்றச்செயலாகும். பிறிதொரு நபராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் போது அங்கே மோசடிகள் இடம்பெற்றுள்ளன என்ற முடிவுக்கு வரமுடியும்.

இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது சந்தேக நபர்களால் வழங்கப்படும் தகவல்கள் அனைத்தும் ஆவணப்படுத்தப்படுவதால் அவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து, அவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றத்தை நிரூபிக்கவும் உரிய ஆதாரங்கள் எம்மிடம் இருக்கும். அதற்கமைய மேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றம் நிரூபிக்கப்பட்ட ஒருவரை ஐந்து வருடங்கள் வரை சிறைவைக்க முடியும் என அவர் தெரிவித்தார்.

திருகோணமலையில் தவறான முடிவெடுத்த ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவர்! – சிறுமி மரணம்

0

திருகோணமலை – ஆனந்தபுரி பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் தவறான முடிவெடுத்த நிலையில் 16 வயது சிறுமி உயிரிழந்ததாக திருகோணமலை பொது வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

தவறான முடிவெடுத்த தாய் உட்பட 5 பேரையும் இன்று காலை 9.20 மணியளவில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் என். விதூசிகா என்ற 16 வயது சிறுமி உயிரிழந்தார்.

என். நாகேஸ்வரி (31-வயது) என்.வைஸ்னவீ (12-வயது) என். ஐஸ்வர்யா (08-வயது) மற்றும் என். கஜவீர் (02-வயது) ஆகியோர் திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்கள் தவறான முடிவெடுத்ததற்கான காரணம் இன்னும் தெரியவரவில்லை. பூசகர் ஒருவரின் மனைவி பிள்ளைகளே இவ்வாறு தவறான முடிவெடுத்ததாக ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கரவெட்டி தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள் தகவல்களை வழங்க கோரிக்கை!

0

கரவெட்டியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அவர்களுடன் தொடர்புடையவர்கள் அச்சமின்றி
சமூகப் பொறுப்புணர்வுடன் தகவல்களை வழங்கி ஒத்துழைக்குமாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ்.கரவெட்டியிலுள்ள மனோகரா அல்வாயைச் சேர்ந்த ஓரே குடும்பத்திலுள்ள மூவருக்கு கொரோனா தொற்று நேற்று (05.11.2020) இரவு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள்;; கரவெட்டி மற்றும் அண்மைய பிரதேசங்களில் பல்வேறு இடங்களுக்குச் சென்று பல்வேறு நபர்களுடன் தொடர்புபட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றனர்.

இவர்கள் தொடர்பான விவரங்கள் தெரிந்தவர்கள் அல்லது இவர்களுடன் தொடர்புகளைப் பேணியவர்கள் வடமாகாண சுகாதார சேவை திணைக்களத்தின் 24 மணிநேர அவசர அழைப்புக்குரிய 021 222 6666 என்ற இலக்கத்தைத் தொடர்பு கொண்டு விவரங்களை அறியத்தரவும். இவ்விவரங்கள் தொடர்பில் இரகசியத்தன்மை இறுக்கமாகப் பேணப்படும்.

இவர்கள் தொடர்பான விவரங்களை அறிவிப்பதன் மூலம் உங்;களுக்குக் கொரோனா தொற்று உள்ளதா? எனப் பரிசோதித்து அறியவும், உங்களது குடும்பங்களையும் அயலவர்களையும் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டிய அவசர சேவைகளை உடன் வழங்குவதற்கும் சுகாதார சேவைகள் திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்நோய் எமது மாவட்டத்தில்; பரவாதிருக்க அச்சமின்றி சமூகப் பொறுப்புணர்வுடன் தகவல்களை வழங்கி ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் எனத் தெரிவித்தார்.

பிரித்தானியாவுக்கு மேலும் 82 கழிவுக் கொள்கலன்களை திருப்பி அனுப்ப தீர்மானம்!

0

கொழும்பு, துறைமுகத்தில் சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட மேலும் 82 கழிவுக் கொள்கலன்களை பிரித்தானியாவுக்கு திருப்பி அனுப்ப நடவடிக் கை எடுக் கப்பட்டுள்ளதாக இலங்கை சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று காலை 65 கொள்கலன்கள், இன்று மாலை 10 கொள்கலன்கள், இன்று இரவு 07 கொள்கலன்கள் என்ற அடிப்படையில் மூன்று கப்பல்களினூடாக அனுப்பப்படும் என சுங்க திணைக்களத்தின் பேச்சாளர் சுனில் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

குறித்த கழிவுக் கொள்கலன்களைச் சட்டவிரோதமாக இறக்குமதி செய்த தரப்பினரை விசாரித்த உடனடியாக தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கடந்த ஒக்டோபர் 30 ஆம் திகதி 20 கழிவுக் கொள்கலன்கள் பிரித்தானியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் சுங்க திணைக்களத்தின் பேச்சாளர் சுனில் ஜயரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

விளையாட்டுப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையின் 119 ஊழியர்களுக்கு கொரோனா!

0

இலங்கையில் COVID 19 வைரசு தொற்றுக்குள்ளானோரின் உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை 12,570 ஆக அதிகரித்துள்ளது.

இவர்களல் 5,918 தொற்றாளர்கள் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், 6,623 பேர் பூரமணாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதேவேளை ,மினுவங்கொட மற்றும் திவுப்பிட்டிய கொவிட் கொத்தில் இதுவரை பதிவாகியுள்ள மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை ஒன்பதாயிரத்து 92 ஆகும்.

வத்தளையில் இயங்கி வந்த விளையாட்டுப் பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஒன்றில் மேலும் 68 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அங்கு மொத்தமாக பதிவாகியுள்ள தொற்றாளர்களின் எண்ணிக்கை 119 ஆகும். மேலும் 400 பேர் வரை பி.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, மீன் வியாபாரி காரணமாக தலாத்துஓயா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட ஏழு பேர் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் 5 கொவிட் மரணங்கள் நேற்று பதிவானதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணரத்தன தெரிவித்தார்.

இந்த மரணங்களுடன் நாட்டில் பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது. நேற்று உயிரிழந்தவர்களில் 3 பேர் பெண்களாவர். உயிரிழந்த ஐவரும் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

தற்போதுள்ள நிலைமையின் கீழ் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக அறிவிக்கப்பட்ட கேகாலை மாவட்டத்தின் புளத்கோப்பிட்டிய பொலிஸ் பிரிவும், கலிகமுவ பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களும் தனிமைப்படுத்தலில் இருந்து விலக்களிக்கப்பட்டுள்ளது. கொவிட் 19 வைரஸ் பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையம் இதனை அறிவித்துள்ளது

கொழும்பு ரிஜ்வே வைத்தியசாலையில் 20 சிறுவர்கள் 12 கர்ப்பிணிகளுக்கு கொரோனா

0

கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இதுவரை 32 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ஜி.ஜயசூரிய தெரிவித்தார்.

தொற்றாளர்களில் 20 பேர் சிறுவர்கள் எனவும் 12 பேர் கர்ப்பிணிகள் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை இந்த வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும் இந்த வைத்தியருக்கு வைத்தியசாலையில் வைத்து தொற்று ஏற்படவில்லை என அவர் கூறினார்.
இந்நிலைமையால் சிகிச்சை பெறுவதற்காக வைத்தியசாலைக்கு வருவோர் அச்சப்படத் தேவையில்லை என அவர் தெரிவித்தார்.

20 நிமிடங்களில் கண்டறியக்கூடிய அவசர PCR பரிசோதனை!

0

ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளதா என்பதை 20 நிமிடங்களில் கண்டறியக்கூடிய அவசரப் பரிசோதனை நிகழ்ச்சித் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்தப் பரிசோதனை முறை மூலம் பீ.சீ.ஆர் பரிசோதனை ஊடாக தொற்றாளர்களை இனக்காண்பதையும் விட விரைவில் நோயாளர்களை இனங்காண முடியும் என்று சுகாதார அமைச்சின் இரசாயனகூட சேவைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சமன் ரத்னாயக்க தெரிவித்தார்.

இதன்படி, உலக சுகாதார அமைப்பினால் அனுமதிக்கப்பட்டுள்ள இரண்டு இலட்சம் வைரஸ் பரிசோதனைக் கட்டமைப்புக்களை கொரியாவில் இருந்து தருவித்திருப்பதாகவும் பிரதிப் பணிப்பாளர் கூறினார்.

அடுத்த வாரம் இவ்வாறான எட்டு இலட்சம் பரிசோதனைக் கருவிகளை தருவிப்பதற்கு அமைச்சு நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரிவித்த அவர், முதலில் தருவிக்கப்படும் இந்த கருவிகள் மூலம் முதலீட்டுச் சபையிலும் மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி சபையின் தொழிற்சாலையிலும் பணிபுரியும் சுமார் 8 இலட்சம் ஊழியர்கள் பரிசோதிக்கப்படவுள்ளனர் என்றும் சுகாதார அமைச்சின் இரசாயனகூட சேவைப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சமன் ரத்னாயக்க மேலும் தெரிவித்தார்.

கொரோனாவிற்கு மத்தியிலும் சிறப்பாக நிறைவடைந்த உயர்தர பரீட்சை!

0

கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சைகள் இன்றுடன் நிறைவடையவுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி முதல் நாடளாவிய ரீதியில் உள்ள 2648 பரீட்சை மத்திய நிலையங்களில் உயர்தர பரீட்சை ஆரம்பமானது.

இம்முறை பரீட்சைக்காக 362,824 பரீட்ச்சார்த்திகள் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இம்முறை IDH வைத்தியசாலையில் மற்றும் தனிமைப்படுத்தல் முகாம்களிலும் பரீட்சைகள் இடம்பெற்றதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் கொரோனாவிற்கு மத்தியிலும் பரீட்சைகள் சிறப்பாக இடம்பெற்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.